பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழின் பழமை 5

இன்று உலகத்தில் உள்ள் மொழிகளுக்குள்ளே மிகப் பழமையான மொழிகளுக்குள் தமிழ் ஒன்று என்பதை மொழி நூல் வல்லவர்கள் ஒப்புக்கொள் கிருர்கள்.

தமிழர் தமக்குள்ளே வழங்கும் கதைகளிலிருந்து இந்தப் பழமையை ஒருவாறு ஊகிக்க முடிரிம். சிவ பிரான் தமிழை உண்டாக்கினர் என்று புராணம் சொல்கிறது. அதனூடே உள்ள உண்மையை நாம் உணரவேண்டும். சரித்திரத்தால் தொடப்படாத காலத்திலேயே, சிருஷ்டியோடு சேர்ந்து படைக்கப் பட்டதென்று தோன்றும்படியான பழமையுடையது தமிழ் என்பதைத்தான் இந்தக் கதை சொல்வதாகக் கொள்ளவேண்டும். சைவர் சிவன் தந்ததாகச் சொன் ல்ை, பெளத்தர் அவலோகிதன் தந்ததாக்க் கூறுவர். எல்லோரும், தெய்வத்தால், மனித சிருஷடிக்கு மூல காரணமான தெய்வத்தால், அமைக்கப்பட்டது இது என்றே சொல்கிருர்கள். அந்தக் கதை தமிழின் தெய்வத்தன்மையைக் குறிப்பதாகக் கொள்வதை விட, அதன் பழமையைக் குறிப்பதாகக் கொள்வதே பொருத்தமாகும். - . . .