பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 பயப்படாதீர்கள்

துரண்மாதிரி இருக்கும் என்று சொல்லாமல் தென்ன மரம் மாதிரி இருக்கும் என்று மற்ருெரு மரத்தையே உபமானமாகச் சொல்வதிலும் இந்தத் தத்துவம் , அடங்கியிருக்கிறது. -

ஆண் என்ற மரத்தைப்பற்றிச் சொல்லும்போது, அரை என்ற மரத்தை ஞாபகப்படுத்துகிருர் தொல் காப்பியர். அவர் கூறும் மரங்களில் ப்லவற்றை நாம் பார்த்திருக்கமாட்ட்ோம்; பலவற்றின் பெயர்களைக் கூடக் கேட்டிருக்க மாட்டோம். ஆண் மரத்தை யார் கண்டார்கள்? நமக்கு ஆண் விலங்க்ையும், ஆண் மகனையுந்தான் தெரியும். சார் என்பது மரமர் ச்ெடியா கொடியா என்றுகூடத் தெரியாது. தமிழர் வாழ்வில் அவை பயன்பட்டன என்பதற்கு அவர்க ளுடைய பேச்சிலே அவை விரவி வந்தது சாட்சி. அவர்கள் பேச்சிலே அந்த மரங்கள் விரவின என் பதற்குத் தொல்கர்ப்பியம் சாட்சி சொல்லுகிறது.