பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கண மரங்கள் 9 |

தின் கிளையை, யோங்கிளே என்று சொல்வார்கள் பிடா மரத்தின் கொம்பைப் பிடாங் கொம்பு என்று கூறுவது வழக்கம், தடா மரத்தின் பூவைத் தடாம்பூ என்று ச்ொல்வது மரபு. இந்த மூன்றிலும் நடுவில் மெல்லெழுத்து வந்திருக்கிறது. இப்படியே மாமரக் கிளவிக்கும், மா என்ற மரத்தின் பெயருக்கும் இலக் கணம் வருகிறது.

ஆ’ என்ற எழுத்துக்குப் பிறகு, இ’ வருகிறது. இ’ என்று முடிகின்ற, உதி, புளி என்ற மரங்களேத் தொல்காப்பியர் கூறுகிருர். ஒடு, சே, விசை, ஞெமை, நமை, பனே, ஆவிரை, ஆண், இல்லம், எகின், ஆர், வெதிர், சார், பீர், நெல், புல், வேல், ஆல், குமிழ் என்ற தாவர வர்க்கங்கள் தொல்காப்பி யத்தில் காணப்படுகின்றன.

ஒரு குழந்தை தென்னமரத்தைப் பார்த்திருக் கிறது; பன மரத்தைப் பார்த்ததில்லை. அதற்குப் பன ம்ரத்தைப்பற்றி விளக்கவேண்டுமானல் நாம், தென்னமரம் மாதிரியே இருக்கும்’ என்று ஆரம் பிக்கிருேம். தொல்கிாப்பியரும் இத்தகைய தந்திரத் தைச் செய்கிறர். உதி என்ற மரப் பெயருக்கு முதலில் இலக்கணம் சொல்லிவிடுகிறர்; பிறகு ஒடு’ என்ற மரப்பெயர் வரும்போது, முன்னே காட் டினேனே உதி மரம்; அது போன்றதுதான் இது வும்’ என்று சொல்கிறர். மனிதனுடைய ஞாபகம் ஒன்றைேடு ஒன்று தொடர்ந்து செல்லும். தொடர் புடைய பொருள்களே நினைப்பது எளிது. ஆகையால், ஒரு மரப் பெயருக்கு இலக்கணம் சொல்லும்போது, வேருெரு மரப் பெயரை ஞாபகப்படுத்துவது மன. இயல்பை உணர்ந்து செய்யும் காரியம். பனமரம்