பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 பயப்படாதீர்கள்

றன. காட்சிக்குகுரிய பிரபஞ்சத்தில் உள்ளமரங்களைக் கேள்விக்கு சப்தப் பிரபஞ்சப் பொருளாகக் காட்டுகிறர். இதுதான் வித்தியாசம்.

தாவர நூலாசிரியர் மரங்களே வகுக்கும் விதம் ஒருவகை. இவை கிளேயில்லா மரங்கள், இவை விதையில்லா மரங்கள், இவை இன்ன உருவத்தை யுடைய மலரைப் பெற்ற மரங்கள்’ என்று கண்ணுல் கானும் மரத்தின் உறுப்புக்களைக் கொண்டு அவற்றை அவர் வகைப்படுத்துகிருர். இலக்கண நூலாசிரியராகிய தொல்காப்பியரோ சப்தப் பிரபஞ் சத்திலுள்ள மரங்களே அவற்றின் பெயரில் உள்ள எழுத்தாகிய உறுப்புக்களைக் கொண்டு வ்குக்கிறர். மாமரமும், ப்லாமரமும், விளாமரமும் தாவர சாஸ் திரிக்கு வெவ்வேறு குடும்பத்தைச் சேர்ந்தனவாக இருக்கலாம். ஆல்ை இலக்கண நூலாசிரியனுக்கு அவை மூன்றும் ஒரே சாதி, ஏன் தெரியுமா? அந்த மூன்று மரத்தின் பெயர்களும், 'ஆ' என்ற எழுத்தைக் கொண்டு முடிகின்றன. -

யோ, பிடா, தடா என்பவை சில மரங்கள். நமக்கு இந்த மூன்றுமே தெரியாத மரங்கள். இந்த மூன்றுமே தொல்காப்பியருக்கு ஒரு சாதி. அதனல் ...முன்றையும் ஒன்ருக வைத்து இலக்கணம் சொல்

கிருர், -

யாமரக் கிளவியும் பிடாவும் தடாவும் ஆம்முப் பெயரும் மெல்எழுத்து மிகுமே.

என்பது ஒரு சூத்திரம். யா என்ற மரப் பெயரும், 'பிடா, தடா என்ற மரப் ப்ெயர்களும் மற்ருெரு வார்த்தையோடு சேரும்போது நடுவில் மெல்லின

எழுத்து வரும் என்பது இதன் அர்த்தம். யா மரத் ,