பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணத் தெரியுமா? 103

‘ஏழு என்ற வார்த்தைக்கு முன் எண்ணிக்கைப் பெயர்கள் வந்தால் இரண்டும் சேர்ந்து எப்படி வழங் கும் என்பதைச் சொல்லும் இடத்தில் இத்தச் சூத்தி ரம் இருக்கிறது, ஏழ்: என்பதே, ஏழு என்ற அர்த்தத் கைக் கருவது. அதற்கு முன்னுல் எண்ணலளவைப் பெயராகிய தாமரை, வெள்ளம், ஆம்பல், என்ற மூன்றும் வந்தால், ஏழ்தாமரை, ஏழ் வெள்ளம், ஏழாம்பல்” என்று நிற்கும். இதைச் குந்திரம் சொல்கிறது. ஐ அம், பல்’ என்று வருகின்ற இறுதியையுடைய, பண் உங்களின் பெயர் அல்லாத எண்கனின் பெயர்க ளாகிய மூன்றும் வந்தாலும் முன்னே சொன்னபடி நிற்கும் என்பது இதன் பொருள். கோடிக்கு மேலே உள்ள ஒரு பெரிய அளவுக்கு, தாமரை” என்றும், அதற்கும் மேற்பட்ட ஒர் எண்ணுக்கு, வெள்ளம் என்றும் அதையும் விடப் பெரிய எண் ஒன்றுக்கு, ஆம்பல்” என்றும் பெயர் வழங்கின செய்தி இதல்ை தெரிய வருகிறது.

பின்ன எண்ணேத் தொல்காப்பியர் போல்வரை கிளவி’ என்று சொல்கிருர். தமிழில் உள்ள எண் சுவடியில், கீழ்வாயில்க்கம், மேல்வாயிலக்கம், குழி மாற்று முதலிய பலவகைக் கணக்கு வகைகள் உண்டு. அவை தொன்று தொட்டுத் , தமிழ்நாட்டில் வழங்கிவத்திருக்கின்றன. அதில் உள்ள பெயர்களில் பெரும்பாலன தனித் தமிழ்ப் பெயர்கள். அவற்றைக் கொண்டே 636 தமிழ்நாட்டின் வாழ்க்கையில் பல காலமாக ஒன்றி வழங்கிவந்தன. என்பதை உணரலாம்.