பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 பயப்படாதீர்கள்

பற்றிச் சொல்ல என்ன காரணம்? :பன்னிரண்டு என்ற வார்த்தை எப்படி வந்ததென்பதை இலக்கண வ்ழியில் தொல்காப்பியர் ஆராய்கிறர். *பத்தும், இரண்டும் சேர்ந்து பன்னிரண்டு ஆகின்றன. பத்து இரண்டு என்ற இரண்டு வார்த்தைகள் புணரும் பொழுது என்ன என்ன மாற்றங்களை அடைகின்றன

என்பதை வரையறுக்கிருர், இப்படியே மற்ற எண்கள், அளவுப் பெயர்கள், நிறைப்பெயர்கள் ஆகியவற்றின் ஆராய்ச்சி தொல்காப்பியருடைய

புணர்ச்சி இலக்கணத்தில் அகப்படுகிறது.

நூருயிரத்தை, லக்ஷம் என்று இப்போது வழங் குகின்ருேம். ல’ என்ற எழுத்து, பழைய தமிழில் ஒரு வார்த்தையின் முதல் எழுத்தாக வராது. வட

மொழி வார்த்தை தமிழில் வரவேண்டுமாளுல் அதற்கு முன்னல், இ’ என்ற எழுத்து வந்து, ல’ என்ற எழுத்துக்குக் கை கொடுக்கவேண்டும். லங்கை என்பது, 'இலங்கை’ என்றும், “லாபம்’ என்பது,

இலாபம் என்றும் வரும்.

தொல்காப்பியத்தில், லக்ஷம் என்ற பெயர் வர வில்லே. நூருயிரம்’ என்றே பழந் தமிழர் வழங்கி யிருக்க வேண்டும். கடைச்சங்க நூல்களில், கோடி’ என்ற எண்ணும் வருகின்றது. அதற்கும் மேலே தமிழர் எண்ணத் தெரிந்துகொண்டிருந்தனர். கோடிக்கு மேல் மூன்று எண்ணிக்கைகளின் பெயர் களேத் தொல்காப்பியச் சூத்திரம் ஒன்று குறிக் கின்றது. - 4. -

ஐ.அம் பல்என வரூஉம் இறுதி அப்பெயர் எண்ணினும் ஆயியல் நிலையும்.