பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணத் தெரியுமா? 101.

தொல்காப்பியத்தின் முதல் அதிகாரமே புலப்படுத்து கிறது.

ஒன்று முதல் பத்துவரையில் எண்ணத் தெரியும். பதினென்று, பன்னிரண்டு, பதின்மூன்று - இப்படி

எண்ணிக்கொண்டே போகத் - தெரியும். இேதென்ன? அரிச்சுவடி தெரியும், எண்சுவடி தெரியும் என்பதையெல்லாம் பிரமாதமாகத் தமிழர்

களுடைய கெளரவத்துக்குக் காரணமென்று சொல். விர்கள்போல் இருக்கிறதே! என்று நண்பர்கள் பரிகாசம் செய்ய எண்ணலாம். பல நூற்றண்டு களுக்கு முன்பு, நாமே நாகரிகத்தின் உச்சத்தில் இருக்கிருேம் என்று இறுமாந்து நிற்கும் இந்தக் காலத்து மக்களும் கண்டு பொருமைப்படும் அமைதி யான வாழ்க்கை வாழ்ந்த அவர்கள், இத்தன்கய வரையறைகளைக் கொண்டிருந்தார்கள் என்பது ஆச்சரியமல்லவா? மொஹெஞ்சதாரோவில் உடைந்த மரக்கால் ஒன்று கிடைக்கிறதென்றல், அதை எடுத் துப் படம் பிடித்துச் சரித்திர ஆராய்ச்சி செய்யப் புகுவது எவ்வளவு உபயோகமோ அவ்வளவு உப யோகம் இந்த ஆராய்ச்சியிலும் இருக்கிறது. அது மரக்கால் என்ற பண்டத்தின் ரூபத்தைப்பற்றிய ஆராய்ச்சி; இதுவோ அந்தப் பண்டத்தின் பெயரைப் பற்றிய ஆராய்ச்சி. ரூபமாக இருந்தால் என்ன? நாம. மாக இருந்தால் என்ன? இரண்டும் அத்தகைய பொருள் வழங்கியதைப் புலப்படுத்தும் சாட்சிகளே. அல்லவா? - - - -