பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 தந்தையும் மகனும்

கல்யாண காலத்தில் எவ்வளவோ மந்திரங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றின் பொருள் நமக் குத் தெரியாமையால் அவை வெறும் சப்தமாய்ச் சம்பிரதாயமாய்ச் சடங்காய்க் கழிகின்றன. வாழ்க் கையில் கணவனும் மனேவியும் எப்படி எப்படி, நடந்துகொள்ள வேண்டும் என்பதை அந்த மந்திரங் கள் சொல்கின்றன. t -

ஒரு மனயிகளே மணமகனுக்கு மணம் செய்து அளிக்கும்போது, இன்ன பெயருடைய பெண்ணே இன்ன பெயருடைய வரனுக்கு அளிக்கின்றேன். என்று பெண்ணின் தகப்பளுர் சொல்வது வழக்கம். அ ப் ப டி ச் சொல்லும்போது அவ்விருவருடைய பெயர்களே மாத்திரம் சொல்லி நிறுத்தாமல் அவர் களுக்கு முந்திய மூன்று தலே முறைப் பெரியார்களின் பெயர்களேயும் சொல்லித் தாரை வார்த்தல் வழக்கம். இந்த வழக்கத்தை நினைத்துத்தான் கம்பர் சூர்ப்பண கையின் கூற்றக ஒரு பாட்டுப் பாடுகிருர் போலும்! ராமனைக் கண்டு மோகம் கொண்ட சூர்ப்பணகையை அவன், நீ யார்?’ என்று வினவுகிறன். அதற்கு. அவள், தன் பெயரைச் சொல்லவில்லே தன் தந்தையைச் சொல்வதோடு நிற்கவில்லை. மூன்று தலைமுறையைச் சுட்டிச் சொல்கிருள்: & -

பூவிலோன் புதல்வன் மைந்தன் புதல்வி: என்று சொல்வதாகக் கவி அமைக்கிருர். -