பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 20 பயப்படாதீர்கள்

யுடையது, அட்டு’ என்ற சொல். பனையிலிருந்து பெறப்படும் அட்டு பட்ைடு.

பனைக்கொடி

பனேக்கொடி என்ற தொடரின் இலக்கணம் ஒரு சூத்திரத்தில் வருகிறது. பனேயைத் துவஐத்தில் எழுதித் தம்முடைய அடையாளமாக வைத்துக் கொண்ட ஒரு கூட்டத்தினர் பழங்காலத்தில் இருந் திருக்கவேண்டும். பலராமனுக்குப் பனேக்கொடி என்று பழஞ் சங்கநூல்கள் கூறிகின்றன. {Lt{} ராமன் பாரத காலத்தில் இருந்தவன். தொல்காப் பியம் பாரத காலத்திற்கு முன்பே இயற்றப்பட்டது என்று ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிருர்கள். நச்சிர்ைக்கினியர் என்ற உரையாசிரியர், வேதவியாசர் வேதத்தைப் பிரிப்பதற்கு முன்பே தொல்காப்பியம் இருந்தது என்று எழுதுகிருர். பனேக்கொடி பலராம னது கொடியாக இருந்தால் தொல்காப்பியம் பாரத காலத்துக்கு முந்தியது என்று சொல்லுதல் தவருகிவிடும். ஒரு கொடியை மன்னன் ஒருவன் ஏந்துவதென்றல், نتی۔{gif பரம்பரையாக வந்ததாக இருக்கவேண்டும். பலராமனுக்கு முன்னும் பாரத தேசத்தில் பனேக்கொடியை உடைய மன்னர் இருந்தனரென்றும் அவர்களைப் பற்றிய செய்திகள் தமிழ் நாட்டில் வழங்கினவென்றும் ஊகிப்பது தொல் காப்பியத்தின் பழமைக்குப் பொருத்தமாக இருக்கும்.

எழுத்ததிகாரத்தில் புணர்ச்சி இலக்கணத்தைச் சொல்லும் சூத்திரங்களிலிருத்தே இவ்வளவு செய்தி கள் நமக்குத் தெரிய வருகின்றன. -