பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பலவகைச் கசய்திகள் i 19

தமிழர்களிடம் நிரம்ப இருந்தன. அதல்ை அந்தப்

பிரயோகத்திற்கு இலக்கணம் வகுக்கவேண்டியது தொல்காப்பியர் கடமை யாயிற்று. நட்சத்திரத்தின் பெயரை வாக்கியத்தில் உபயோகப்படுத்தும்போது

இன்னபடி அதன் உருவம் மாறும் என்று சொல்கிருர், அப்படிச் சில சூத்திரங்கள் வருகின்றன.

பரணி நட்சத்திரத்தில் ஒரு பொருளேத் தந்தான் என்று சொல்லவேண்டுமாகுல், பேரணியாற் றந்தான்’ என்று சொல்வது பழைய வழக்கம், சித்திரை’ என் பது ஒரு நட்சத்திரத்திற்கும் பெயர்; மாதத்திற்கும்

பெயர். வாக்கியத்தில் அவைகளே உபயோகப்படுத் தும் விதத்திலிருந்து மாதமா, நட்சத்திரமா என்று தெரிந்து கொள்ளல்ாம். சித்திரையாற் கொண் டான்’ என்ருல், சித்திரை நட்சத்திரத்தில் வாங்கிக் கொண்டான் என்று தெரிந்துகொள்ள வேண்டும்; சித்திரைக்குக் கொண்டான்' என்ருல் சித்திரை மாதத்தில் வாங்கிக்கொண்டான் என்று பொருள்

கொள்ளவேண்டும் இந்த மாதிரி வழக்கெல்லாம் இப் போது போய்விட்டன. காலத்துக்கு ஏற்றபடி சில வழக்கங்கள் மாறுவது இயல்பே.

தொழிலுக்குக், கேம்’ என்று ஒரு பெயர் முன் வழங்கி வந்தது. அவ்விடம், இவ்விடம் என்ற அர்த்தத்தில், அதோளி, இதோளி, ஆன், ஈன் என்ற பதங்களே முன்காலத்தில் உபயோகித்து வந்தார்கள். .

பனேயிலிருந்து வெல்லம் எடுப்பது இந்நாட்டின் காலங் கண்ட தொழில். இப்போது, பனங்கருப்பட்டி: என்று வழங்குவதை அக்காலத்தில், பட்ைடு என்று குறித்தார்கள். காய்ச்சி எடுத்தது என்ற பொருளை