பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 பயப்படாதீர்கள்

வெகு நேரம் நீண்டுவிட்டது என்று பொருள். நாய், பலகை’ என்பவற்ருேடு சேர்ந்தால் வல்ல நாய், வல்லப்பலகை என்று வரும். இந்த இாண்டு வழக் கிற்கும் தொல்காப்பியர் இலக்கணம் சொல்கிருர். அதல்ை நமக்கு அக்காலத்தில் வல்லாடும் பழக்கம் இருந்த செய்தி தெரியவருகிறது. -

நாளும் கோளும்

தமிழர் வானசாஸ்திர அறிவு படைத்திருந்தார் கள். வானில் உலவும் கிரகங்களைக் கோளென்றும், இன்ன காலத்தில் இன்ன இடத்தில் வரும் என்ற வரை யறையும் அசுவனி முதலிய பெயர்களேயும் உடை யவற்றை, நாள்’ என்றும், மற்ற நகூடித்திரங்களே, மீன்? என்றும் வழங்கினர். அரசர்களுடைய அரண்மனையில் நாளுங் கோளும் ஆராய்ந்து, வருவன உரைக்கும் சோதிடன் மந்திரிக் கூட்டத்தாரோடு சேர்ந்திருந் தான். அவனே கணி’ என்ற பெயரால் அழைத்தார் கள். பழங்காலத்துப் புலவர்களிற் பலர் சோதிடத் தில் வன்மை பெற்றவர்களாக இருந்தார்கள். கேணி மேதாவியார், என்று கடைச் சங்க காலத்தில் ஒரு தமிழ்ப் புலவர் இருந்தார். அவர் சொந்தப் பெயர், மேதாவியார்’ என்பது; கணிதநூல் வல்லவராதலின், கேணி’ என்ற பட்டம் அவருக்கு உரித்தாயிற்று. கேணியன் பூங்குன்றன் என்ற புலவரும் சோதிடரே. நல்ல நாள் பார்த்தல், நிமித்தம் பார்த்தால் முத லிய வழக்கங்கள் இந்நாட்டில் இன்று நேற்று வந்தன அல்ல; பல நூற்ருண்டுகளாக இங்கே இருக் குன்றன. பேச்சு வழக்கிலும் இலக்கியத்திலும் நகஷத் திரங்களை அடிக்கடி உபயோகிச்கும் சந்தர்ப்பங்கள்