பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பல வகைச் செய்திகள் 1 1 7

நாடு என்று வழங்கி வந்தார்கள். அது பிறகு, மலே ஞாலம்’ (ஞாலம் - பூமி) என்ருகி நாளடைவில் யாளம் ஆகிவிட்டது.

தாக்கோல்’ என்பதன் பண்டை உருவம், தாழக்கோல்; தாழைத் திறக்கும் கோல் என்பது பொருள். பழங் காலத்தில் பூட்டு இல்லேயென்றே தெரிகிறது. கதவு களின் தாழை வெளியிலிருந்தே ஒரு திறவுகோலேக் கொண்டு தள்ளிப் பூட்டும் வழக்கம் இருந்தது. இன் னும் கிராமங்களில் கதவுகளில் இதற்கேற்ற துவார மும் திறவுகோலும் இருப்பதைக் காணலாம். தாழைத்

திறப்பதற்கும் போடுவதற்கும் உதவும் கோல் தாழ்+கோல், அது, தாழக்கோல்’ என்று ஆயிற்று. தொல்காப்பியர் காலத்தில் தாழக்கோல் வழங்கி

வந்தது. தாழ், கோல்’ என்னும் இரண்டும் சேர்ந் தால், தாழக்கோல்’ என்று ஆவதற்கு அவர் இல்க் கணம் சொல்கிருர்,

சூது விளையாட்டு

தமிழர்கள் அவர் காலத்தில் பொழுது போக்குக் குப் பல விளையாட்டுக்களே விளேயாடி வந்தார்கள். சது சங்கம் போன்ற சூதாட்டம் ஒன்றை அவர்கள் ஆடினர் கள். அதை, வல்’ என்று சொல்லிவந்தார்கள். பலகை யில் கட்டம் கிழித்து ஆடும் விளையாட்டு அது. அந் தப் பலகைக்கு, வல்லப் பலவகை என்று பெயர். அவ் விளையாட்டில் உபயோகப்படும் காய்களே, நோய்’ என்று வ்ழங்கினர். இப்பொழுதும் கட்ட விளையாட்டில் காய் களை, நோய் என்று சொல்வது உண்டு, வேல் என்ற சொல் வாக்கியத்தில் வரும்போது வல்லு என்று வரும்; வல்லு நீண்டது” என்ருல் விளையாட்டு