பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

பல வகைச் செய்திகள்

தாக்கோல்:

ஒரு மலேயாள நம்பூதிரி வெளியூருக்கு ஒரு நாள் போயிருந்தான். அன்றிரவு அவன் விட்டில் திரு டன் வந்து பெட்டியைத் திருடிக்கொண்டு போய் விட்டான். அவன் மீண்டு வந்தபோது ஒருவர், 'உன் வீட்டில் திருடன் புகுந்து பெட்டியை அடித்துக் கொண்டு போய்விட்டான்’ என்ருர், கேட்ட நம்பூதிரி, பேரவாயில்லே, தாக்கோல்’ என்னிடம் இருக்கிறது, அவன் அதைத் திறக்க என்னிடந்தான் வந்தாக வேண்டும்? என்று சொன் குைம். நம்பூதிரியின் மட மையைக் காட்ட இந்தக் கதையைற் சொல்வார்கள். தோக்கோல்’ என்பது சாவிக்குப் பெயர். நாம், திறவு கோல்’ என்று வழங்குவதைப்போல் மலேயாளத்தில் தோக்கோல்’ என்று செல்லுகிருர்கள்.

தாக்கோல்? என்பது தமிழ்ச்சொல்தான். அது மூன்காலத்தில் இந்நாட்டில் வழங்கி வந்தது. நாளடைவில் வழக்கு ஒழிந்தது. - - -

மலேயாள மொழி தமிழிலிருந்து பிரிந்தது. அதில் பழங்காலத்தில் தமிழில் வழங்கி வந்த வழக்குகள் பல வற்றைக் காணலாம். தொல்காப்பியர் காலத்தில் மலே யாள மொழி தனியாக உண்டாகவில்லை. மலேயாள நாடு அக்காலத்தில் தமிழ்நாடாகவே இருந்தது. மலே