பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 24 பயப்படாதீர்கள்

இன்ன எழுத்துக்கள் பிறக்கும் என்பதும், இன்ன இன்ன எழுத்து இன்ன இன்ன உறுப்புக்களின் முயற்சி யால் தோற்றும் என்பதும் இப்பகுதியில் வரும் செய்திகள்.

ஒரு சூத்திரத்தில், ஆசிரியன் இந் நூலில் எல்லா எழுத்துக்களும் பிறக்கும் விதத்தைக் கூறி வெளிப் படுத்தியதல்ை, யானும் அவ்வாறே எண்வகை யிடத் திலும் எழுத்துக்கள் பிறப்பதைக் கூறினேன். அப்படி

ான் கூறினவாறன்றி உந்தியில் தோற்றும் காற்றனது. வேறுபட்டு மாத்திரை அதிகமாவதும், மூலாதாரத்தில் எழுகின்ற காற்றின் ஒசையை நாடித் தெரிந்துகொள் வதும் அந்தணர்களின் வேதத்திலிருந்து உணர்ந்து கொள்வதற்குரியன. அவற்றை இங்கே சொல்லாமல், உந்தியில் தோன்றிப் புறத்தே வெளிப்படையாக ஒலித் துப் பொருள் தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் காற் றுக்கே அளவு கூறினேன்?' என்று தொல்காப்பியர் சொல்லுகிருர்,

‘புணரியல் என்பது நான்காவது பிரிவு. வார்த்தை யும் வார்த்தையும் சேரும்போது என்ன நிகழும் என் பதைப் பொதுவாகச் சொல்வது இது. மொழி மாபிற் கூறிய மொழிகளைப் பொதுவகையாற் புணர்க்கும் முறையை உணர்த்தினமையின் இப்பெயர் வந்ததென்று நச்சிர்ைக்கினியர் காரணம் கூறுவர். இதில் உள்ள சூத் திரங்கள் 40. . . .

வார்த்தைகளின் முதலும் ஈறுமாகிய எழுத்துக்கள் மெய், உயிர் என்பதும், இரண்டு சொற்கள் சேரும் போது முதல் வார்த்தையின் இறுதி எழுத்தும் இரண் டாவது மொழியின் முதல் எழுத்தும் சேருமென்றும், அப்படிச் சேருகையில் இயற்கையாகவோ, மூன்று வகை யான வேறுபாடு பெற்றே நிற்கும் என்ற செய்தியும்,