பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுரை 盘多岔

இன்ன இன்ன வார்த்தைகள் புணர்வதற்குரியன என்ப தும், வேற்றுமை உருபுகளும், புணர்ச்சியில் அவை பெறும் மாறுபாடுகளும் இன்ன என்பதும், உருபுகள் வந்து சேரும் போது இடையே தோன்றும் சாரியைகள் இன்ன என்: தும், அந்தச் சாரியைகள் புணர்ச்சியில் இன்ன இன்ன வேறு பாடுகளே அடையும் என்பதும் இதில் வரும் செய்திகள்.

இரண்டு வார்த்தைகள் சேரும்போது முதலில் நிற்கும் சொல், நிறுத்த சொல்என்றும், வந்து சேரும் சொல், குறித்துவரு கிளவி என்றும் வழங்கும் என்பது ஒரு சூத்திரத்தால் தெரிகிறது, ஒரு சூத்திரம் நட் சத்திரப் பெயர் உருபோடு சேர்வதற்கு இலக்கணம் கூறுகிறது. ஒரே எழுத்துக்களையுடைய தொடர் மொழி கள் ஓசை வேறுபாட்டால் வெவ்வேறு மொழிகளாகப் பிரிக்கப் பெறும் என்ற செய்தி ஓரிடத்தில் வருகிறது. "குன்றேருமா என்பதை குன்று ஏரு (த) மா’ என்றும், குன்று ஏறு ஆமா என்றும் பிரிப்பதைப்போல அத் தொடர்கள் பிரிக்கப் பெறும். **

தொகைமரபு என்னும் ஐந்தாவது இயல், இன்ன இறுதியுடைய சொல் புணர்ச்சியில் இப்படி முடி: மென்ற இலக்கணத்தைச் சொல்வது. பல சூத்திரங் களால் தனித்தனியே சொல்ல வேண்டியவற்றைத் தொகுத் துச் சுருக்கிச் சொல்வதல்ை இப்பெயர் அமைந்தது. சூத்திரங்கள். 30. -

அதோளி, இதோளி, உதோளி (அங்கே, இங்கே, உங்கே), எதோளி (எங்கே) என்ற சொற்கள், வரும் வார்த்தையோடு சேரும்பொழுது உண்டாகும் மாற்றம் ஓரிடத்தில் கூறப்பெறுகிறது. அளவுப் பெயர், நிறைப் பெயர், எண்ணிக்கைப் பெயர்கள் தமக்கு உட்பட்டவற். றைக் குறிக்கும் சொல் வந்தால் இடையிலே ஏகாரம்