பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளுறை 127

பொருள். மயங்குதல் - புணர்தல் 98 சூத்திரங்கள் உள்ள பகுதி இது.

இதில் அகரம் முதல் ஒளகாரம் வரையில் உள்ள. உயிர் எழுத்துக்களில் ஒவ்வொன்றிலும் முடியும் சொற். களுக்குப் புணர்ச்சி இலக்கணம் சொல்லப்படுகிறது. வல் லினம் இரட்டிக்கும் இடம், இயல்பாக நிற்கும் இடம் என்ற பகுப்புக்களையெல்லாம் இதில் காணலாம்.

பதின்ைகுக்கு மேற்பட்ட மரப் பெயர்கள் இப்பகுதி யில் வருகின்றன. 'வாழி’ என்று இப்போது வழங்கும் வாழ்த் துச் சொல்லுக்கு, வாழிய’ என்பது மூலம் என்றும், மேகவு’ என்ற சொல்லுக்கு, மக என்பது மூலமென்றும், பசுவைக் குறிக்கும், ஆ’ என்ற சொல்லும் தசையைக் குறிக் கும், ஊ’ என்ற சொல்லும் 'ன்' என்ற சாரியை பெற்று ஆன், ஊன், என வழங்குகின்றன என்றும், சாணத்துக்கு, ஆப்பி’ என்னும் பெயர் அக்காலத்தில் வழங்கியதென்றும், நாழி' என்பதும், உரி’ என்பதும் சேர்ந்து, நாடுரி என்று ஆகும் என்றும், காற்றை ஐந்து பூதங்களில் ஒன்ருக வைக்கும் மரபு அக்காலத்திலேயே இருந்ததென்றும், நட்சத் திரத்தை நாளென்றும் மாதத்தைத் திங்களென்றும் கூறு வரென்றும், பனையிலிருந்து விளையும் வெல்லத்தை, அட்டு’ என்பரென்றும், பனே" அட்டு, என்ற இரண்டு சொல்லும் சேர்ந்து, பட்ைடு’ என ஆகுமென்றும், வேட்கை அவா என்ற இரண்டும் சேர்ந்து, வேணவா’ என ஆகுமென்றும் புல்ப்படுத்தும் சூத்திரங்கள் இப்பகுதியில் இருக்கின்றன.

புேள்ளி மயங்கியல் என்னும் எட்டாவது பிரிவு புள்ளி பெறும் மெய்யெழுத்துக்களை ஈற்றில் கொண்ட சொற் கள், வருமொழிகளோடு புணர்வதற்கு இலக்கணம் வகுப்பது; குத்திரங்கள் 110.

மெய்யீறுகளை வரிசையாக எடுத்துக்கொண்டு ஒவ்