பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

重患8 பயப்படாதீர்கள்

கிவான்றுக்கும் புணர்ச்சியில் உண்டாகும் வேறுபாடு களைச் சொல்கின்ற பகுதி இது.

இப்பகுதியில் வரும் சில முக்கியமான் செய்திகள்; ஆண்’ என்பது ஒரு மரம்; காயம்’ என்பது ஆகாயத்தைக் குறிக்கும் சொல், எண்’ என்பது எள்ளுக்கு ஒரு பெயர்; 'அகம், கை’ என்ற இரண்டும் சேர்ந்தால் அங்கை’ என ஆகும்; நும்’ என்று இயற்கையான சொல்; அதுவே திரிந்து, நீயிர் என்பது ஆகும்; தொழிலேக் குறிக்கும் பொதுச் சொல் 'கம் என்பது; ஆன்,ஈன் என்பன, அவ்விடம் இவ்விடம்,என்பவற்றைக் குறிப்பவை, பஞ்சுக்கு,பேன்’ என்’ தும் உலோகவேலேக்கு, கன்’ என்றும் பெயர்கள் வழங்கின. ஆதன், பூதன், தான், பேன், கோன்’ என்பன மக்களுக்கு வழங்கும் பெயர்கள்; முன் இல்’ என்பன சேர்ந்து, முன் நில் என வரும்; 'பொன்' என்பது செய்யுளில் பொலம்’ என்று ஆகும்; தந்தை பெயரோடு சார்த்தி மகன் பெய ரைச் சொல்வது ஒரு வழக்கு தமிழ் என்பது கூத்து முத லியவற்ருேடு சேர்ந்தால் அகரம் பெற்றுத் தமிழக் கூத்து என்பதுபோல வரும்; ஆயிரம், நூருயிரம் என்ற எண்கள் வழக்கில் இருந்தன; ஐ, அம், பல்’ என்ற மூன்றிலும் முடியும்: *தாமரை, வெள்ளம், ஆம்பல்” என்பன பேரெண்கள் மக்கள் என்பது இயற்கையான சொல். இப்பகுதியில் பதின்மூன்று மரங்களின் பெயர்கள் வந்துள்ளன.

ஒன்பதாவது, குற்றியலுகரப் புணரியல். குற்றியலு கர்த்தில் முடியும் சொற்களோடு மற்றச் சொற்கள் வந்து சேரும்போது உண்டாகும் செய்கையை வகுப்பது. குத் திரங்கள் 78

குற்றியலுகரம் இத்தனை வகைப்படுமென்று கூறி ஒவ்வொரு வகையும் புணர்ச்சியில் முடியும் விதத்தைச்