பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கத் தமிழ் Y

நூலியற்றும் வன்மை வாய்ந்த புலவர்கள் கணக்கில் லாமல் இருந்தார்கள். நினைத்தவர்களெல்லாம் நினைத்தபடி கவி பாடி நூல்களாக வெளியிடத் தொடங்கில்ை தமிழ் நாட்டில் நூல் குப்பை மலிந்து விடும். அவ்வளவு நூல்களையும் தமிழர்கள் படிக்க வேண்டியது அவசியமா? என்ற கேள்வி வேறு எழும். 'ஆராய்ந்து அமைவுடைய கற்பவே? என்று காலடியார் சொல்லுகிறது. கணக்கில்லாத நூல்களைப் பார்த்து, தமக்கு வேண்டியவை இவை என்று ஆராய்ந்து, தமக்குப் பொருத்தமானவற்றைக் கற்பது தான் வாழ்க்கைக்கு உபயோகப்படும் கல்வி என்று அப்புலவர் கூறுகிருர்.

அமைவுடைய நூல்களே ஆராய்வது எப்படி? அதற்கு ஒரு குறிப்பிட்ட அறிவுத் திறமை வேண் டாமா? இக்காலத்தில் யுனிவர்சிடிகளில் பாட புத்த கங்களைத் தேர்ந்தெடுப்பதற்குத் தனிச் சபையார்கள் உண்டு. பள்ளிக்கூடத்தில் படிக்கும் மாணுக்கர்களுக் குச் சில நிபந்தனைகளுக்கு உட்பட்ட புத்தகங்களே பாடமாக வருகின்றன. அந்தப் பாடப் புத்தகங்கள் பெரும்பாலும் வெளி உலகத்தாருக்குப் பயன்படா மலே போகின்றன. -

பண்டைத் தமிழ் நாடு முழுவதும் ஒரு பள்ளிக் கூட்ம்; விடுதலே பெற்ற பள்ளிக்கூடம்; சுதந்தரக் காற்றை நுகர்ந்த கலாசாலே. தமிழனுடைய நாகரிகம் கல்வியென்னும் அடிபடையின் மீது எழுந்தது. கோசல நாட்டை வருணிக்கும் கம்பன், ஏகம் முதல் கல்வி முளைத்துஎழுந்து எண்ணில் கேள்வி ஆகுஅம் முதல்திண் பணபோக்கி: என்று சொல்கிருன். கல்வியிலிருந்து ஆரம்பிக்கிறது ராமராஜ்ய) நாகரிகம்.