பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8." பயப்படாதீர்கள்

மக்களை மக்களாகச் செய்வது கல்வியே என்ற அடிப் LJ డ} LL T6F கொள்கையில் தமிழர் தங்கள் கலே வாழ்வை நிருமித்து வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்வு முழுவதும் கலேயறிவைத் தேடும் மாளுக்கர்களாக

வாழ்ந்தார்கள். யாதானும் நாடாமால் ஊர் ஆமால் என்ஒருவன், சாந்துனேயும் கல்லாத வாறு’ என்று இரங்குகிருர் வள்ளுவர். இடவரையறையும் கால வரையறையும் அறிவுப் பசியுள்ளவனுக்கு இல்லே யாம். எந்த நாட்டிலும் கல்வியைப் பரப்பலாம்.

எந்த ஊரிலும் கலைத்தொண்டு செய்யலாம். மூச்சிருக் கும் வரைக்கும் கல்வியைப் பயின்று இன்புறலாம். ஆகவே, தமிழர் கொள்கைப்படி உலகமே ஒரு பள்ளிக்கூடம், மனிதனுடைய ஆயுள் முழுவதுமே படிப்தற்குரிய காலம்.

இப்படி அமைந்த வாழ்க்கையில் கணக்கில்லாத 'நூல்கள் குவிந்தால் தமிழன் எதைப் படிப்பான்? எதை விடுவான்? பழங்காலத்துத் தமிழர்கள் இந்தச் சங்கடத்திற்குள் மாட்டிக்கொள்ளவில்லை. தமிழ் நாடாகிய பள்ளிக்கூடத்தில் இன்ன நூல்களே வழங் குவதற்கு உரியன என்ற வரையறையைச் சில பெரி யோர்கள் சேர்ந்து அமைத்தார்கள். அந்தப் பெரி யோர்கள் கூடிய கூட்டமே சங்கம் என்ற பெயரால் வழங்கப்படும். இந்தக் காலத்துப் பாட புத்தகங் களுக்கு, பாட புத்தக சபையாரால் அங்கீகரிக்கப்பட் டது’ என்ற முத்திரையிடுவதை நாம் பார்க்கின் ருேம். அந்தக் காலத்தில், தமிழ் நாட்டில் வழங்கிய எல்லா நூல்களுக்கும், அதாவது தமிழ் என்ற பெய ரால் வரும் எதற்கும், அத்தகைய முத்திரை இருந் தது; சங்கத் தமிழ் என்பதுதான் அது.