பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கத் தமிழ் 9

புத்தகங்களைத் தக்கவை என்று நிர்ணயிக்கும் பெரியோர்கள் எப்படி இருந்தார்கள்? கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், இவற்றில் சிறந்தவர்கள் அவர்கள். நல்லிசைச் சான்ருேர்’ என்று அவர்களே வழங்கினர்கள். பிரிவின்றிப் புலவர்கள் ஒன்று சேர்ந்த ஒற்றுமையால் பல அருமையான செயங்களெல்லாம் நிகழ்ந்தன. தனிப் புலவன் ஒருவனுக்கே மற்ற மனிதர்களேக் காட்டிலும் உயர்ந்த பெருமை இருக் கும் பொழுது, பல புலவர்கள் சேர்ந்த ஒரு கூட்டத் திற்கு எவ்வளவு பெருமை இருக்கவேண்டும்?

பழைய தமிழ் நூல் ஒன்றில் ஒரு புலவர் மதுரையை வருணிக்கின்ருர். மாடங்கள் நிறைந்த அந்த மதுரைக்குப் புகழ் நிறைந்த சிறப்புண்டாம். பாண்டியனுடைய ஆணேக்கு அடங்கி மாந்தர் வாழும் இயல்பில்ை வந்த சிறப்பல்ல அது. வேருெரு கூட்டத். தார் செலுத்துகின்ற ஆணையால் அந்தச் சிறப்பு உண் டாகிறதாம். அந்த ஆணே இன்று நேற்று வந்ததல்ல. பல காலமாக வழி வழியே வந்த தொல்லாணேயாகும். அந்த ஆனேயைச் செலுத்துகின்ற பெரியார் நல்ல ஆசிரியர்கள். அவர்கள் பலர் ஒன்றுசேர்ந்து தமிழை ஆராய்ந்து இன்புற்றர்கள். இந்தப் புகழ்சான்ற) சிறப்பு மதுரைக்குத் தனி உரிமை.

தேரல்லானே கல்லாசிரியர்

புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் - என்று அழகாக அந்தப் புலவர் வருணிக்கின்றர். அத்தகைய புலவர்கள் கூடிய சங்கங்களில் புடம் பெற்ற பொன்கை வெளிப்பட்டதுதான் சங்கத் தமிழ்.