பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் புலவர்

தொல்லான நல்லாசிரியர் என்ற புகழைப் பெற்ற பு ல வ ர் க ளே ந ல் வி ைச ச் சான் ருேர் என்றும் சொல்வார்கள். இந்தக் காலத்தில் கலாசாரம் என்றும் பண்பாடு என்றும் மொழி பெயர்த்துச் சொல்லுகின்ற கல்ச்சர் (Culture) என்ற பண்பைச் சான்ருண்மை என்ற சொல்லால் பழங்

காலத்தில் வழங்கினர்கள் என்று தெரிய வருகிறது. அன்பு, தீய செயல்களில் நாணம், சமரச பாவம், கருணை, உண்மையுணர்ங்சி ஆகிய இந்த ஐந்தும் சேர்ந்த ஒரு கூட்டுப் பண்பையே, சான்ருண்மை என்று அக்காலத்தில் சொன்னர்கள். மேல்நாட்டார் கல்ச்சர் (Culture) என்று சொல்கின்ற பண்பெல்லாம் இதற்குள் அடங்காவோ? சங்கப் புலதர்கள் என்ற சான்ருேர் கூட்டம் ஆங்கிலத்தில், தி கல்சர்டு’ (The Cultured) என்று சொல்கிருர்களே, அந்தப் பெரியார் கூட்டமாகவே இருந்தது. அவர்கள் தம்முடைய அறிவுச் செங்கோல் கொண்டு தமிழ்நாடு முழுவதை யும் ஆண்டார்கள். அரசர்களும் சங்கப் புலவர்கள் ஆணைக்கு அடங்கி ஒழுகினர்கள். -

பண்டிதரென்றும் புலவரென்றும் பெயர் வைத் துக்கொண்டிருக்கும் இக்கால மனிதர்களுக்குள் பகை மையும் பொருமையும் தாண்டவமாடுவதைப் பார்க் கிருேம். ஆனல் பண்டைக் காலத்துச் சங்கப்