பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கப் புலவர் 1 :

புலவர்கள் மிக நெருங்கிப் பழகினர்கள். சிறிதேனும்

குற்றமற்ற கல்வி கேள்வியை உடையவர்களாகி, தம்முள் விரோதமில்லாது ஒன்றுகூடி வாழும் வாழ்க்கை சொர்க்கபோகத்தைவிட இனிமையுடை

யது என்று ஒரு புலவர் சொல்கிருர். சொர்க்க போகம் இதைவிட இனியது என்று யாரேனும் சொன்னல் அங்கே போய்ப் பார்த்துவிட்டு வருவேன்’’. என்று வீறுடன் முழங்குகிருர் அப் புலவர். ‘இகல் இலராகி ஒன்று கூடிய புலவர்கள் அடைந்த ஆனந் தம் அளவற்றது. அந்தப் புலவர் கூட்டத்தால் தமிழர்கள் அடைந்த பயனே மிகப் பெரிது. புலவர் கள் அடைந்த இன்பம் அவர்கள் காலத்தோடு போயிற்று. அவர்களால் நாம் அடைந்த பயனே இன்றளவும் நின்று நிலவுகிறது; இனியும் நிற்கும்.

பகையென்பது மருந்துக்கும் இல்லாது, சிறந்த அன்பில்ை ஒன்றுபட்டு, புலவர்கள் வாழ்ந்தார்கள். இதற்குச் சில உதாரணங்களைச் சொல்லலாம். கபிலர் என்ற ஒரு புலவர் பாரி என்னும் அரசனுக்குச் சிறந்த உயிர்த் தோழராக வாழ்ந்திருந்தார். கோப்பெருஞ் சோழன் என்னும் அரசனிடம், பாண்டி நாட்டில் வாழ்ந்த பிசிராந்தையார் என்ற புலவர் உயிரோடு ஒன்றிய நட்பைக் கொண்டிருந்தார். சோழன் இறந்து படவே புலவரும் உயிர் நீத்தார். இப்படி நட்பிற்கு உறைவிடமாக இருந்த புலவர்களுடைய நெஞ்சம் அன்பு பொங்கும் ஊற்ருக இருந்தது. அவர்கள் தமக்குள் ஒற்றுமையாக வாழ்ந்ததோடு அல்லாமல், ஒருவர்க்கொருவர் பகைத்துக்கொண்ட மன்னர்க ளிடையேயும் சமாதானத்தை உண்டு பண்ணினர்கள். அறிவிலுைம் அன்பிலுைம் தமிழ் மன்னர்களையும்