பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் 25

இடைச்சங்கம் இருந்த கபாடபுரத்தைப்பற்றி வால்மீகியின் இராமாயணத்தில் ஒரு செய்தி வரு கிறது. சுக்கிரீவன் வானரப்படைகளேச் சீதையைத் தேடும்பொருட்டு அனுப்பின்ை அல்லவா? அப்

பொழுது தென்னட்டை நோக்கிச் செல்லும் கூட்டத் தைப் பார்த்து அந்நாட்டின் இயல்புகளே யெல்லாம் சொல்கிருன். இன்ன இன்ன இடத்தில் இன்ன இன்ன மலேகளையும் ஆறுகளேயும் பார்ப்பீர்கள் என்று அடையாளம் சொல்கிருன். மணிகளாலும் முத்துக் களாலும் அழகமைந்து விளங்கும் கபாடபுரமென்ற நகரத்தைக் காண்பீர்கள்?’ என்று சொல்கிருன்.

இதைக்கொண்டு வால்மீகி முனிவர் காலத்தில் பாண்டியர்களுக்குக் கபாடபுரம் தலைநகராக இருந் தது என்று தெரிகிறதல்லவா?

கம்பராமாயணத்தில் இதே - சந்தர்ப்பத்தில் வேருெரு விதமான செய்தி வருகிறது. சுக்கிரீவன் அனுமன் முதலியவர்களை நோக்கித் தென்றமிழ் நாட் டுப் பெருமைகளைச் சொல்கிருன். தென்றமிழ் நாட்டில் விசாலமான பொதிகை மலே இருக்கிறது. அதன்கண் அகத்திய முனிவராகிய தமிழ் முனிவர் எழுந்தருளி யிருக்கிறர். பல புலவர்கள் கூட்டம் புடைசூழ அவர் அங்கே விளங்குகிறர். அங்கே ஒரு தமிழ்ச்சங்கமே இருக்கிறது. நீங்கள் அங்கே சென்று உங்கள் மனத்தை இன்றமிழில் ஈடுபடுத்திவிட்டால் நீங்கள் போன காரியத்தையே மறந்து விடுவீர்கள். தமிழினிமை உங்களைத் தன் வசப்படுத்திவிடும். ஆகையால் நீங்கள் பேசாமல் அந்த மலேயை வலஞ் செய்து விட்டு உங்கள் காரியத்தின்மேற் கண்ணுகச் சென்று விடுங்கள்’ என்று எச்சரித்து அனுப்புகிருன்.