பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் தலைமேல்

அகத்தியர் மூன்று தமிழுக்கும் இலக்கணமாக ஒர் இலக்கண நூல் இயற்றினர். அது அவருடைய

பெயரோடு சார்த்தி, அகத்தியம்’ என்று வழங்க லாயிற்று. தமிழ் நாட்டில் அந்த இலக்கண நூல்

பரவிப் பெரும் புகழை அடைந்தது. தவத்தால் உயர்ந்து தமிழ் வளர்த்த அகத்திய முனிவரைத் தெய்வத்தைப்போலக் கொண்டாடினர்கள். சிேவ

பெருமானுக்கு அடுத்த படியாக எண்ணக் கூடிய பெருமை யுடையவர் அகத்தியர்’ என்று புலவர்கள் பாராட்டுகிருர்கள். முனிவர்கள் பலர் வந்தாரென்று சொல்ல வேண்டுமானல், முனிவர் வந்தார்; அகத் தியர் வந்தார்’ என்று அவரைத் தனியே எடுத்துக் கூறுவது ஒரு வழக்கம். அதல்ை அவருக்குத் தனித் தலைமை இருந்ததென்பது தெரியவரும்.

கம்பர் அவரையும் திருமாலேயும் ஒப்பிடுகிருர். திருமால் தம்முடைய நெடிய உருவத்தால் மூவுலகங் களேயும் அளந்தார்; அகத்தியரோ குறுகிய உருவத் தைக் கொண்டே உலகத்தை அளந்தாராம்; அப்படி அளப்பதற்கு, நீண்ட தமிழ்’ அவருக்குத் துணை செய்ததாம். நீண்ட் தமிழால் உலகை நேமியின் அளந்தான்’ என்று கூறுகிறர். நேமியின் - திரு. மாலைப் போல.