பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

பழந்தமிழ் நூல்களைப்பற்றித் தொடர்ச்சியாகப் பிரசங்கங்கள் செய்து வரவேண்டுமென்று மயிலாப்பூர் இந்திய இளைஞர் சங்கத்தினர் (Y. M. T. A) ஒரு முறை கேட்டுக் கொண்டனர். அவர்கள் விருப்பத்தின்படியே செய்யத் தொடங்கி, முதலில் தமிழின் பழமையையும், அப் பால் அப்போது கிடைக்கும் தமிழ் நூல்களுள் மிகப் பழையதாகிய தொல்காப்பியத்தையும் பற்றிப் பேசினேன். தொல்காப்பியத்தை இலக்கணம் என்ற வகையிலே பர்ரா மல், பழந்தமிழர் வாழ்க்கை இன்னபடி இருந்தது என்ப தைத் தெரிந்து கொள்ள உபயோமமாகக் கிடைக்கும் பழைய சாட்சி என்ற அளவிலே பார்த்தால் என்ன என்ன கெய்திகளே உணரலாம் என்ற ஆராய்ச்சியாக என் பிரசங்கங்கள் அமைந்தன. - -

எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என்ற மூன்று அதிகாரங்களிலுள்ள செய்திகளையும் இவ் வாறு பார்த்துத் தொகுத்துப் பேசியபோது, கேட்ட அன் பர்கள், நான் பேசியதில் விளங்காத கருத்து ஒன்றும் இல்லே என்று சொன்குனர்கள். அப் பிரசங்களே எழுத் துருவத்தில் அமைக்கவேண்டும் என்றும் சில அன்பர்கள் கூறிஞர்கள். அவ்வாறே செய்ய நினைந்து, ஹநுமான்’ பத்திரிகையில் வாரந்தோறும் எழுதிவந்தேன். எழுத்ததி காரம் முடிந்தவுடன் வந்தவற்றைக் தொகுத்துப் புத்தக வடிவில் அமைக்கப் புகுந்தேன். பத்திரிகையில் வெளி யான கட்டுரைகளைப் புதுக்கியும் திருத்தியும் கூட்டியும் குறைத்தும் சில புதிய பகுதிகளைச் சேர்த்தும் இதனைச் சித்தம்செய்தேன். t