பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மிகப் பழஞ்சாதியினர். பலபல நூறு ஆண்டு களுக்கு முன்பே நாகரிக வாழ்க்கையில் தலைநிமிர்ந்து நின் றனர். நல்லுணவுண்டு, அழகிய ஆடை, உடுத்து, எழிலணி புனைந்து வாழ்ந்தனர். மரங்களைப் போற்றி அவற்றல் வரும் பயனே நுகர்ந்து சிறந்தனர். பூவும் கனியும் அவர் வாழ்வில் மணத்தையும் சுவையையும் பெருக்கின. ஆனும் பெண்ணும் இசைந்து காதல் வாழ்வில் இன்பம் கண்ட னர். அன்புடையார் தொடர்பில் வேணவாப் பூண்டும், பகையுடையார்பால் முரண்கொண்டும், காதலேயும் போர் விரத்தையும் வளர்த்தும் வாழ்ந்தனர். கம்மக் கலனும் கன்னக் கலனும் அணியவும் வழங்கவும் தொழிலாளர் செய்து தந்தனர். பன்னும், பஞ்சை நூற்று ஆடையாக்கி அணிந்தனர். நெல்லே அளந்தும், பொன்னே வழங்கியும் வாணிகம் நடத்தினர். அளத்தும், நிறுத்தும், எண்ணியும் பண்டங்களே வாங்கினர். உழவும், தொழிலும், வாணிக மும் அவர் துறைபோன செயல்கள்.

வாழ்க் கையில் வழங்கும் பண்டங்கள்ையும் செயல்களையும் பேச்சில் வழங்குவது மக்கள் இயல்பு. பண்டம் இருந்தால் அதுபற்றிப் பேச்சு உண்டு. பேச்சு உண்டு என்ருல் அதற்குப் பொருளாகிய பண்டமும் இருக்கவேண்டும். தொல்காப்பியம் மொழியின் இலக் கணம். மொழி வாழ்விலே கருவியாக உதவுவது வாழ் வைக் குறிக்கும் செய்திகள் அதில் இருக்கத்தின் வேண்டும். தொல்காப்பியத்தின் மூலம் பண்டைத் தமிழர் வாழ்க் கையை உணரலாம் என்பதற்கு இதுவும் ஒரு காரணம். தமி ழர் வாழ்க்கை அள்வளவையும் அப்படியே இலக்கண நூலால் தெரிந்துகொள்ள முடியாது, ஆலுைம் ஒரு சிறு புழை மூலமாகப் பார்ப்பது போலப் பார்க்கலாம். அப்