பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.

லக்ஷணமும் அவலகஷணமும் 5

நூல்களுல் சொல்லப்படும் பொருள்களின் இலக் கணங்கள், செய்யுட்களின் இலக்கணங்கள், அலங் 'காரம் முதலிய பல பெருள்களைச் சொல்கின்றது. நாளாக ஆக இந்த அதிகாரத்திற் கண்ட இலக்கணங் கள் விரிந்துகொண்டே வந்தன. எழுத்து, சொல் என்ற இரண்டிலும் சிறப்பான விரிவு இல்லாவிட்டா லும், பொருள் என்ற பிரிவில் அமைந்த செய்திகள் விரிந்து பலவேறு பிரிவுகளாகத் தனித்தனியே ஆராய்ச்சிக்கு உட்பட்டன. அதல்ை தனித்தனி இலக்கண நூல்களும் உண்டாயின. 3.

பொருளதிகாரத்தில் சொல்லப்படும் கருத்துக் களுள் அகப்பொருள் என்பது ஒன்று. அது காதல் வாழ்வைப்பற்றிய செல்திகளே உடையது; அதைத் தனிய்ே விளக்கும் நூல்கள் பிற்காலத்தில் எழுந்தன. பெரும்பாலும் போர் முறைகளைத்பற்றிச் சொல்லும் புறப்பொருள் என்ற பகுதியும் அப்படியே தனி நூல் களில் ஆராயப்பட்டது. செய்யுளியல் என்ற பகுதியில் தொல்காப்பியர் செய்யுளின் இலக்கணங்களேச் சொல்கின்றர். அவை தனியே விரிந்து பல யாப்பிலக் கண நூல்கள் உண்டாகக் காரணமாயின. உவம இயல் என்ற பிரிவில் சொல்லப்பட்ட இலக்கணங் களும் மெய்ப்பாட்டியலில் வரும் இலக்கணங்களும் விரிந்து அணியிலக்கண நூல்கள் ஆயின. தனிச் செய்" யுளின் இலக்கணத்தைச் சொல்லும் இலக்கண நூல் களே யாப்பிலக்கண நூல்களென்று குறிப்பார்கள்; : பல செய்யுட்கள் அடங்கிய நூல்களின் இலக்கணத் தைச் சொல்லும் இலக்கண நூல்களைப் பாட்டியல்கள் என்று கூறுவார்கள். பிற்காலத்தில் நிகண்டுகள் பல உண்டாயின. தொல்காப்பியத்தில் உரி இயலில்