பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பயப்படாதீர்கள்

வேண்டுமென்றுதான் தெரிகிறது. தமிழை இயல், இசை, நாடகம் என்று மூன்று பிரிவாகப் பிரித்தார் கள். அந்த மூன்றுக்கும் ஒருங்கே இலக்கணம் இயற் றினர் அகத்தியர். அவர் மானுக்கராகிய தொல்காப்பி, யர் இயலுக்கு மாத்திரம் இலக்கணம் வகுத்தார். அந்த இலக்கணத்தை மூன்று பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டார். அ, ஆ, இ, ஈ என்று வரும் தமிழ் எழுத்துக்களப்பற்றிய ஆராய்ச்சியைத் தனியே எழுத் ததிகாரம் என்ற முதற் பகுதியாகப் பிரித்துச் சொல்லி யிருக்கிருது. எழுத்துக்களால் ஆன சொற்களேயும், சொற்கள் வாக்கியங்களாகச் சேர்ந்து பயன்படும் முறையையும் ஆராயும் பகுதிக்குச் சொல்லதிகாரம் என்ற பெயரை வைத்தார். வாக்கியங்களால் சொல் லப்படும் விஷயத்தைப்பற்றி ஆராயும் பகுதிக்கும் பொருள் அதிகாரம் என்று பெயர்,

தொல்காப்பியத்தில் ஒவ்வோர் அதிகாரத்திலும் ஒன்பது ஒன்பது பிரிவுகள் இருக்கின்றன. அந்தப் பிரிவுகளுக்கு இயல் என்று பெயர். நட்சத்திர மண்ட லத்தில் இருபத்தேழு நட்சத்திரங்கள் சிறப்பாக நின்று சுடர் விடுவதுபோலத் தமிழ் வானத்தில் தொல்காப்பி யர் இயற்றிய இருபத்தேழு இயல்கள் மொழியைப் பற்றிய உண்மைகளே அறிவித்துக்கொண்டு சுடர்

வடமொழியில் இலக்கணத்தை வியாகரணம் அல்லது சப்த சாஸ்திரம் என்று சொல்வார்கள். அது எழுத்து, சொல் என்ற இரண்டைப்பற்றியே சொல் லும், மற்ற விஷயங்களுக்குத் தனித்தனியே சாஸ்திரங் கள் இருக்கின்றன. *

தொல்காப்பியத்தில் உள்ள பொருளதிகாரம்,