பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லக்ஷணமும் அவலக்ஷணமும் 43

எழுத்துக்கள் சேர்ந்த வார்த்தைகள், வார்த்தைகள் சேர்ந்த வாக்கியங்கள், வக்கியங்களால் புலப்படும் கருத்து, உரைநடை, செய்யுள் என்று ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ள பல பகுதிகள் இருக்கின்றன. இவற் றைப் பற்றிய செய்திகளைச் சொல்லும் நூலேத் தான் இலக்கணமென்று சொல்லுகிருேம். நம் முடைய தேகத்தில் இன்ன இன்ன உறுப்புக்கள் இருக்கின்றன, இன்ன இன்ன முறையில் அந்த உறுப்புக்கள் வேலை செய்கின்றன, அவை முறைமாறி வேலே செய்தால் இன்ன இன்ன துன்பங்கள் உண் டாகும் என்று உடற்கூற்று நூல் சொல்லுகிறது. அதுபோலவே மொழியின் இலக்கணத்தை இலக்கண நூல் சொல்லுகிறது. --

தமிழில் இந்த இலக்கண ஆராய்ச்சி முதலில் சிறிய அளவிலே இருந்தது. எல்லாப் மொழிகளி லும் இலக்கண ஆராய்ச்சி வரவரத்தான் விரிந்து வந்திருக்கின்றது. பெரியவர்கள் நூல்களே இயற்ற இயற்ற அவைகளுக்குள்ள்ே என்ன என்ன அழகுகள் இருக்கின்றன என்பதை ஆராய்ந்து அவற்றைத் தனியே இலக்கணம்' என்ற பேயாால் பின் வந்த அறிஞர்கள் அளித்தார்கள். பொருள் ஒன்று இருந்தால் தான் அதன் தன்மை நமக்குத் தெரியும், இலக்கிய மாகிய மூலப்பொருள் உண்டாக உண்டாக அவற்றின் இலக்கணங்களை ஆராய்ந்து வெளிப்படுற்தும் முயற்சி யும் எழுந்தது. - -

தமிழில் இப்போது இலக்கண ஆராய்ச்சி மிக விரிந்துவிட்டது. அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்ற இலக்கண நூல், இப்போதுள்ள விரிவைப் பார்க்கும்போது மிகச் சுருக்கமாக இருந்திருக்க்