பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பயப்படாதீர்கள்

யால், அது அதனைப் பூரணமாக உச்சரித்துவிடுகிறது. பழைய காலத்தில் குற்றியலுகரத்தைக் கண்ணுல் பார்த்தாலே தெரிந்துகொள்ளும்படி அதன் தலையில் ஒரு புள்ளி வைத்துவந்தார்க்ள். ஒசை குறைவாக இருக்கும் எழுத்துக்களுக்குப் புள்ளி அடையாளம் இடுவது தமிழில் வழக்கம். க் என்பதைவிட க் என் பது ஓசை குறைந்தது; அரை மாத்திரை குறைந்தது என்று இலக்கணப்படி கணக்கெடுத்திருக்கிறர்கள். க என்ற எழுத்தைவிடக் குறைந்தமையால் அதன் தலயில் ஒரு புள்ளியிட்டு க் என்று எழுதுகிருேம். இப்படித்தான் சங்கு என்று எழுதும்போது கடைசி எழுத்தின் தலையில் ஒரு புள்ளிவைத்து எழுதுவது பழைய, வழக்கம். இந்த மாதிரி ஓசை குறைந்த இகரம் ஒன்று உண்டு. அதற்குக் குற்றியலிகரம் என்று

பெயர். அதன் தலையிலும் புள்ளி போடுவார்கள். •

ஒருவர் கதை சொல்லிக்கொண்டு வருகிறர். நாம் 'ஹும் கூட்டுகிறேம். அந்த ஒலியை ஹாம் என்று எழுதுகிருேம். ஆல்ை அதில் உள்ள ம் என்ற எழுத் தைப் பூரணமாக உச்சரிப்பதில்லை, அந்த ஒலி மூக்கி லேயே நின்றுவிடுகிறது. ஹிந்தி மொழியிலும் ஸம்ஸ் கிருதத்திலும் அதை எழுதிக் காட்ட முடியும். தமிழில் ள்ழுதிக்காட்டப் பழைய காலத்தில் ஒரு வழியைச் சொல்லியிருக்கிருர்கள். ஒசை குறைந்த எழுத்துக்குத் தலையின்மேல் புள்ளி வைப்பது வழக்கம் என்று தெரிந்துகொண்டோமல்லவா? இந்த ஹம் என்ற ஒலியிலுள்ள ம் முன்பே ஒரு புள்ளியைப் பெற்றிருக் கிறது. அது பின்னும் குறைந்தால் மற்றெரு தலைப் புள்ளியைப் ப்ோடுவதா? போட்டால் எழுதும் வேகத் தில் இரண்டு புள்ளிகளும் ஒன்ருகப் போய்விடுமே