பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து விசித்திரம் 63

இருக்கிறது அந்து எழுத்து. அதுமாதிரி ஒர் ஆயுதம் பழைய காலத்தில் இருந்ததாம். அதனுல்தான் அந்த எழுத்துக்கு ஆய்தம் என்ற பெயர் வந்ததாம். \

நம் வீட்டில் ஒரு குழந்தை பால்ர் வகுப்பில் படிக் கிறது. எழுத்துக்களைக் கூட்டிப் படிக்கும் பருவத்தில் இருக்கிறது. மூ, க், கு, மூக்கு” என்று படிக்கிறது.

படிக்கும்போது அந்தக் ‘கு’ வைக் கொஞ்சம் நீட்டிச் சொல்கிறது. 'சங்கு என்று படித்தால் கு என்ற எழுத்தைப் பரிபூரணமாக உச்சரிக்கிறது.

ஆல்ை சாதாரணமாக அது பேசும், போதோ, சங்கு, மூக்கு என்ற வார்த்தைகள் வந்தால் அப்பொழுது கவனித்துப் பாருங்கள். நாம் பேசுவது ப்ோலத்தான், இருக்கும். சங்கு என்ற வார்த்தையில் உகரத்தை நாம் பூர்ணமாக உச்சரிப்பதில்லை. அதைக் குழந்தை படிக்கும்போது கண்ணுல் பார்க்கும் எழுத்தை மாத் திரம் உச்சரிக்கிறதே ஒழிய, நாம் எப்படிப், பேசுகி ருேம் என்பதைக் கவனிப்பதில்லே.

ஆகவே குழந்தை சங்கு என்று படிக்கும்போது கு’ என்ற எழுத்தின் உச்சரிப்பு ஒரு விதமாகவும், பேசும்போது வேறு விதமாகவும் இருக்கிறது. பேசும் போது உகரத்தைத் தொட்டும் தொடாமலும் விட்டு. விடுகிறது. அதாவது உ என்ற ஒசை முழுவதும் அங்கே வராமல் குறைகிறது; குறைந்த இயல்போடு அந்த உ. நிற்கிறது. அதற்குக் குற்றியலுகரம் என்று தமிழர்கள் பெயர் வைத்திருக்கிருர்கள். குறுகிய இயல்பை உடைய உ என்ற எழுத்து என்பது அப். பெய்ரின் பொருள். * -

குழந்தை படிக்கும்போது குற்றியலுகரத்தைத் தெரிந்துகொள்ளத் தனியே அடையாளம் இல்லாமை