பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 62 பயப்படாதீர்கள்

கிருர்கள்? இந்த மாதிரி படிக்கும் பிள்ளைகளைப் பார்க் கும்போது அகரம் முதல் எழுத்து, ன் கடைசி எழுத்து என்று சொல்ல வேண்டியது . அவசியம் என்று தோற்றுகிறது.

தொல்காப்பியத்தில் ஆரம்பச் சூத்திரம் இதைத் தான் சொல்கிறது. இலக்கணம் மொழியின் சட்டம். தெரியாததைச் சொல்லிவிட்டுத் தெரிந்தவைதாமே என்று சிலவற்றை விடுவது சட்டத்தில் இல்லே. தொல்காப்பியர் முதல் சூத்திரத்தில், அ என்பது முதல் ன் என்பது வரையில் உள்ள முப்பதும் எழுத்து என்று சொல்லப்படும்’ என்று ஆரம்பிக் கிருர். இந்தக் காலத்தில் அந்த வரிசையை அறிவுறுத் துவது மிகவும் அவசியம் அல்லவா?

எழுத்துக்களில் இரண்டு வகை உண்டு. அ என் பது முதல் ஒள என்பது வரையில் உள்ளவற்றை உயிரெழுத்துக்கள் என்று சொல்லுவார்கள். க் முதல் ன் வரையில் உள்ள பதினெட்டையும் மெய் எழுத்துக் கள் என்று சொல்லுவார்கள். உயிரும் உடலும் சேர்ந்த மனிதர்களைப் போலத் தமிழ் எழுத்துக்கள் உலகில் வழங்குகின்றன. உடம்புக்குள் புகுந்து கொண்டு உயிர் அதை ஆட்டிவைக்கிறது. அப்படிப் போல் உயிரெழுத்துக்கள் இருக்கின்றனவாம்.

தமிழ் எழுத்துக்களின் சரித்திரமும் இலக்கணமும், மிக்க விசித்திரமானவை. மூன்று சுழிகளைப் போட்டு அக்கன்ன என்று சொல்லி எழுதுகிருேமே, அதற்கு ஆய்தம் என்ற பெயரை இலக்கணக்காரர் கள் கொடுத்திருக்கிறாகள். அடுப்புக்கல் மாதிரி