பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 பயப்படாதீர்கள்

கெடகவெனும’ என்று எழுதியிருப்பார்கள். இப் போது நாம் புள்ளிகளே விட்டு எழுவதில்லை. மிகப் பழைய காலத்திலும் புள்ளியை விடாமல் எழுதி வந்திருக்க வேண்டும்.

எ, ஒ என்னும் இரண்டையும் புள்ளி பெற்ருல் குறிலாகவும், புள்ளி பெருவிட்டால் நெடிலாகவும் உச்சரிக்கும் வழக்கம் முன்பு இருந்தது. நாளடைவில் புள்ளியிடுவதை மறந்தபோது எகர ஏகாரங்களுக்கும் ஒகர ஒகாரங்களுக்கும் வித்தியாசம் தெரியவில்லே. இந்தச் சங்கடத்தை அறிந்த ஒரு வெள்ளைக்காரர். எழுத்தை மாற்றினர். ஏயிலுள்ள கீழ்க்கோடும், கே, கோ என்பவ்ற்றின் கொம்பிலுள்ள தலைச் சுழியும், ஒ விலுள்ள கீழ்ச்சுழியும் அவர் சிருஷ்டிகள். அந்த விசுவாமித்திரர் யார் தெரியுமா? சில நூற்ருண்டு களுக்கு முன் இத்தாலி தேசத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து தமிழைக் கற்றுப் பெரும் புலவராகி விளங்கிய பாதிரியார் அவர், அவருடைய இயல்பான பெயர் பெஷி என்பது. இங்கே வந்த பிறகு, வீரமா முனிவர்? என்றும், தைரியநாதசுவாமி’ என்றும் பெயர் பெற். றர். ஏ. ஓ, .ே என்ற எழுத்துக்கள் மூன்றையும் அவர் உண்டாக்கினர். தமிழர்களும் அவற்றை ஒப்புக் கொண்டார்கள். - .

பழங்காலத்தில் எகர ஒகரங்களும் மெய்களும் குற்றியலுகரமும் குற்றியலிகரமும் மகரக்குறுக்கமும் புள்ளியிட்ட எழுத்துக்களாக விளங்கின அதிசயத் தைத் தொல்காப்பியத்திலிருந்து அறிகிருேம். கரும் புள்ளி (Black Mark) வைப்பது என்ருல், மதிப்புக்