பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து விசித்திரம் 67

குறைவு என்று பொருள் செய்வது இக்காலத்து வழக்கு; புள்ளி வைத்தால் ஒசைக் குறைவுக்கு அடையாளம் என்பது தமிழில் பழையகாலத்து வழக்கு இது விசித்திரமான ஒற்றுமையாகத் தோற்ற வில்லேயா? - . -

இலக்கணத்தின் மூலமாக இன்ன இன்ன எழுத் துக்கள் புள்ளி பெறுமென்று தெரிந்து கொள்வதோடு இலக்கியங்களிலிருந்தும் இந்தச் செய்தியைத் தெரிந்துகொள்ள முடிகிறது. புள்ளியுள்ள எழுத்துக் களை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு சமத்காரமாதச் சில புலவர்கள் சில பாடல்களைப் பாடியிருக்கிருர்கள். '

'ஓதி' என்பதற்குக் கூந்தல் என்னும் பொருள் உண்டு. 'ஓ’ என்ற எமுத்து, பழையகாலத்தில் ஒ: என்றே இருந்தது அல்லவா? அதன்மேல் ஒரு புள்ளி யிட்டால் முன் சொன்ன சொல்லே, ஒதி: என்று படிக்க வேண்டும். அது . ஒரு மரத்தின் பெயர். மயிரை வைத்து அதற்கு ஒரு புள்ளியிட்டால் மரமாகும்’ என்று விடுகதையைப்போல ஒரு புலவர் சொல்கிருர்,

'மயிர்கிறுவி மற்றதற்கோர் புள்ளி கொடுப்பின் செயிர்தீர் மரமாகும் சென்று. ---

இந்த விடுகதையோடு மற்றென்றையும் சேர்த்

தார் ஒரு புலவர். ஏரி என்பது பழைய உருவத்தில் புள்ளிபெற்றல், எரி என்ருகும். நீர் நிலை புள்ளி பெற் ருல் நெருப்பாகிவிடும் என்று சமத்காரமாகச் சொல் கிருர், - o

கேரிழையார் கூந்தலிளுேர் புள்ளிபெற நீண்மரமாம்

நீர்நிலையோர் புள்ளி பெறநெருப்பாம்.: - (நேரிழையார் - பெண்கள்.)