பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பயப்படாதீர்கள்

புள்ளிக்கு வடமொழியில் பிந்து? என்று பெயர். புள்ளியிட்ட எழுத்துக்களே வரும்படி பாடுவது ஒரு சாதுரியம். அந்த விசித்திரத்தை, பிந்துமதி' என்று. சொல்வார்கள்.

நெய்கொண்டே னெட்கொண்டெனெற்கொண்

டென் கொட்கொண்டென் செய்கொண்டேன் செம்பொன்கொண் டென்’ என்ற பாடலப் பிந்து மதிக்கு உதாரணமாக யாப்பருங்கலம் என்ற நூலின் உரையாசிரியர் காட்டி யிருக்கிறர். இந்தப் பாட்டில், எகரங்களும் ஒகரங் களுமே வந்திருக்கின்றன. பழைய வதக்கப்படி இவை யெல்லாம் புள்ளியிட்டு எழுதும் எழுத்துக்களே, ஆதலால் இது பிந்துமதி ஆயிற்று. -