பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

எழுத்து வரிசை

எழுத்துக்களே அ, ஆ, இ, ஈ, என்ற வரிசைப்படி அமைத்திருக்கிருர்களே, அதற்கு ஏதாவது காரணம் உண்டா என்பதை ஆராய வேண்டும். திரு வள்ளுவர் திருக்குறளில் முதற்பாட்டிலேயே 'அகர முதில் எழுத்தெல்லாம்?? என்று ஆரம்பிக்கின்றர். 'எல்லா வகையான எழுத்துக்களுக்கும் அ , என்ற எழுத்தே முதல்’ என்று அவர் சொல்கிறர். இந்திய மொழிகளில் எல்லாம் அகரமே முதலாக இருக்கிறது. ‘அ’ என்ற எழுத்துக்குப் பிறகு, ஆ’ என்பதை வைப் பானேன்? க’ என்பதற்குப் பிறகு ங் இருப்பதற்குக் காரணம் என்ன? இத்தகைய கேள்விகளுக்கு இலக் கண நூல்கள் விடை சொல்கின்றன. - r

தொல்காப்பியத்தில் எழுத்தின் இலக்கணத் தைப் பற்றிக் கூறும் முதல் பகுதியில் ஒரு பிரிவுக்கு 'பிறப்பியல் என்று பெயர். எழுத்துக்கள் எப்படிப் பிறக்கின்றன என்பதைச் சொல்லும் பிரிவு அது. எழுத்தின் ஒலியைப்பற்றி ஆராயும் சாஸ்திரத்தைப் போனடிக்ஸ் (Phonetics) என்று ஆங்கிலத்தில் கூறு வார்கள். அந்தச் சாஸ்திரத்திலுள்ள பல செய்திகளைத் தொல்காப்பியம் பிறப்பியலில் கூறுகிறது. -

எழுத்தை நாம் எப்படி உச்சரிக்கிருேம்: அதற்கு எந்த எந்த உறுப்புக்கள் அவசியம்? இந்தச் செய்தி களையே பிறப்பியல் சொல்லுகிறது. :பல்லுப் போல்ை