பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பயப்படாதீர்கள்

சொல்லுப் போச்சு’’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. மந்திரங்களே உச்சரித்துப் பயன் பெறுபவர் கிளுடைய சக்தி, பல் விழுந்துவிட்டால் குறைந்து விடும் என்று சொல்வார்கள். இதற்குக் காரணம், எழுத்துக்களேச் சரிவர ఆు பல்லும் அவசியமான கருவியாக இருப்பதுத்ான்.

- நாம் பேச ஆரம்பிக்கும்பொழுது நம்முடைய உடலில் ஒரு பெரிய சங்கீதக் கச்சேரி ஆரம்பமாகிறது. பேசுவதையே சங்கீதமாக வைத்துக்கொள்ளலாமே! இந்த உடம்பைச் சாரீர வீணே என்று சொல் வது ஒரு வழக்கம். சங்கீதம் ஆரம்பிப்பதற்கு முன்பு சுருதி போடவேண்டும். இங்கே எழுத்துக்களே உச்சரிப்பபிற்கு முன்பு சுருதி நம்முடைய நாபியில் ஆரம்பமாகிறதாம். அங்கிருந்து காற்று எழுகிறது. அந்தக் காற்றுக்கு, 'உதானன்” என்று பெயர் வைத்திருக் கிருர்கள். அந்தக் காற்று மேலெழுந்து வருகின்றது. அது மார்பிலே சிறிது நின்று பிறகு வாய் வழியாகப் புறப்படுகிறது; சில சமயங்களில் கழுத்தளவும் வந்து அங்கே தங்கியும் புறப்படும்; மூக்கிலே தங்கியும் தலே யிலே தங்கியும் புறப்படுவதுண்டு. கடைசியாக வாய் வழியாகப் புறப்படும்போதுதான் பல பல முயற்சிகள் நடைபெறுகின்றன. சங்கீதக் கச்சேரியில் பக்க வாத்தியங்களும் பிரதானமான பாடகரும் இருப்பது போல நாக்காகிய பாடகருக்குப் பல், மேல் வாய், இதழ் முதலிய உறுப்புக்கள் உதவிபுரிகின்றன.

இவ்வாறு நாபியிலிருந்து வரும் காற்று எங்கே திங்குகிறதோ அந்த இட வேறுபாட்டாலும், நாக்கு எந்த எந்தக் கருவிகளோடு எப்படி எப்படிப் பொருந்துகிறதோ அந்த வேறுபாட்டாலும் எழுத்