பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து வரிசை 71

தின் ஒலி பல வகையாக ஏற்படுகிறது. ‘அ’ என்ற எழுத்து, நாபியிலிருந்து எழுந்த காற்று யாதொரு தடையும் இன்று வெளியேறுவதால், வாயைத் திறந்த வுடன் இயற்கையாக ஒலிக்கின்றது. நாக்குக்கு அங்கே வேலே இல்லே. கீழ் வாய் மாத்திரம் கீழே போய் வாயைத் திறந்து ஒலியை வெளிவிடுகிறது. வாயைத் திறந்த மாத்திரத்திலே இயற்கையாகப் பிறப்பதல்ைதான் அகரத்தை முதலில் வைத்தார்கள். திறந்த வாயைச் சிறிது அதிகமாகத் திறந்தால், ஆ’ என்ற எழுத்து உதயமாகிறது. அதன் பிறகு, நாக்கு, பல் முதலிய கருவிகளின் சம்பந்தத்தால் மற்ற எழுத் துக்கள் பிறக்கின்றன.

உதடுகளின் முயற்சியால், உ, ஊ, ஒ, ஓ, ஒள என்ற எழுத்துக்கள் உண்டாகின்றன. ப, ம, வ’ என்ற எழுத் துக்களுக்கும் உதட்டின் உதவி அவசியம். இரண்டு உதடுகளேயும் கைகளால் பிடித்துக்கொண்டால் பல எழுத்துக்களே உச்சரிக்க முடியாது. ஆனல் தமிழில் சில ஒலிகள் இருக்கின்றன; இரண்டு உதடுகளேயும் கட்டிவிட்டு, அவை அசையாமல் இருக்கும்படி செய் தாலும் அந்த ஒலிகளே வாசிக்கலாம். இது மிகவும்

ஆச்சரியமாகத் தோன்றுகிறதல்லவா? எழுத்துக்களே உச்சரிக்கும் முறை இப்படி என்று நன்ருகத் தெரிந்து கொண்டவர்களுக்கு, உதடு ஒட்டால் பேசுவது

எப்படி என்ற தந்திரம் தெரியவரும்.

சாதாரணப் பேச்சில், விடுகதை சொல்லுபவர் கக் கூட இந்தத் தந்திரத்தைத் தெரிந்துகொண். டிருக்கிறர்கள். அண்ணனுக்கு எட்டாது; தம்பிக்கு எட்டும்’ என்ற விடுகதையை நீங்கள் கேட்டிருக் கலாம். அதற்கு விடை உதடுகள் என்பது. மேலுதடு.