பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 பயப்படாதீர்கள்

அண்ணனம்; கீழுதடு தம்பியாம். நாம் பேசும்போது மேலுதடு கீழுதட்டைத் தொடுவதில்லே, கீழுதடுதான் மேலுதட்டைத் தொடும். இதைத்தான் அண்ணனுக்கு எட்டாது தம்பிக்கு எட்டும் என்று வேடிக்கையாக அமைத்தார்கள். இந்த அர்த்தத்தைக் காட்டிலும் மிகவும் நுட்பமான அர்த்தம் வேறு ஒன்று இந்த விடுகதைக்கு உண்டு. அண்ணன் என்று சொன்னல் உதடுகள் சேரவேண்டாம்; தம்பி’ என்ருல் பின் இரண்டு எழுத்துக்களுக்கும் உதடு சேர்வது அ.ே சியம். ஆகவே, அண்ணன் என்ற வார்த்தைக்குச் சேராமலும், தம்பி, என்ற வார்த்தைக்குச் சேர்ந்தும் வருவது என்ற பொருளும் இந்த விடுகதைக்கு உண்டு. - -

உ, ஊ, ஒ, ஓ, ஒள, ப, ம, வ' என்ற எட்டு எழுத் துக்களேயும் சொல்லாமல் நீக்கிவிட்டு, மற்ற எழுத்துக் களே மாத்திரம் கொண்டு பேசில்ை உதட்டுக்கு ஒய்வு சொடுத்துவிடலாம். இந்த எட்டு எழுத்துக்களும் இல்லாமலே சில புலவர்கள் பாட்டுப் பாடியிருக்கிறர் கள். அதற்கு, நிரோஷ்டகம் என்று பெயர். சிவப் பிரகாச முனிவர் என்ற புலவர் திருச்செந்தூரிலுள்ள முருகனே முப்பது பாட்டுக்களால் துதித்திருக்கிருர். உேதடு ஒட்டாமல் பாடுகிறேன்’ என்று வேண்டிக் கொண்டாரோ, என்னவோ! முப்பது பாட்டும் நிரோட்டகம்; உதடு ஒட்டாமல் பாடக்கூடியவை. அந்தத் தோத்திர நூலுக்கு, திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி என்று பெயர். நிரோட்டக அந்தாதியை இதழகல் அந்தாதி என்று தமிழில் சொல்வது வழக்கம்.

சங்கீதத்தில் ஏழு ஸ்வரங்கள் வைத்திருக்கிருர் கள். வாத்தியத்தில் ஒவ்வொரு ஸ்வரத்துக்கும்