பக்கம்:பயப்படாதீர்கள் கி. வா. ஜ..pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழுத்து வரிசை 73:

ஒவ்வொரு ஸ்தானம் உண்டு. ஒவ்வொரு ஸ்வரமாக ஒசை ஏறிக்கொண்டே வரும். ச ரி க ம ப த நி என்ற முற்ை அந்த ஒலியை நோக்கி வரிசைப்படுத்திய தாகும். கங், சஞ, டண, தந, பம’ என்ற எழுத்துக் களும் அந்த மாதிரி ஒரு வகையாக வரிசைப்படுத்திய வைகளே. நம்முடைய வாயாகிய வாத்தியக் கருவியில் நாக்கு வாசிக்கிறது. வான வளேயத்தைப் போல வளைந்திருக்கிற மேல் வாயில் ஒவ்வோர் இட மாகத் தொடுகிறது. அப்படித் தொடும்போது உள் வாயிலிருந்து இதழ் வரையில் வரிசையாக வந்தால் கங் முதலிய எழுத்துக்கள் பிறக்கின்றன. உளவாயை அடிநாக்குத் தொடும்போது, கே, ங் என்ற இரண்டு. சப்தங்களும் பிறக்கின்ற்ன. க’ என்ற ஒலி எழும்போது காற்று, கீழிலிருந்து வருகிறது; 'ங்' என்ற ஒலிக்கு மூக்கி லிருந்து வருகிறது, ஆகவே, அந்த ஸ்தானத்தில் இரண்டு எழுத்துக்கள் உண்டாகின்றன.

'ச, ஞ, மேல் வாயின் நடுவை, நடு நாக்குத் தொட உண்டாகின்றன; டண' வை அதற்கு அடுத்த இடத் தில் நாக்குத் தொட்டு உண்டாக்குகிறது. த, ந’ இரண் டும் பல்லின் அடியை நாக்கின் நுனி தொடும்போது. உண்டாகின்றன. அப்பால் உதடு இரண்டும் ஒட்டும் போது, ப, ம பிறக்கின்றன, இப்படி உள்வாயிலிருந்து ஒவ்வொரு ஸ்வர ஸ்தானத்தையும் தொட்டு வரும் விரலேப்போல நாக்கு இயங்குவதால் ஒலி வரும் போது வரிசையாக, க முதலிய எழுத்துக்கள் வரு கின்றன. இந்த ஒலி நுட்பத்தைக் கவனித்தே எழுத் துக்களின் வரிசையைத் திட்டம் செய்திருக்கிருர்கள்.