பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருத்தலப்பயணம் 67

திவ்விய தேசங்களை மங்களாசாசனம் செய்யும்போது இந்தத் திவ்விய தேசத்தை நினைவுகூர்கின்றார். திரு நறையூரை மங்களாசாசனம் செய்யும்போது,

முலைத்தடத்த நஞ்சுண்டு துஞ்சப் பேய்ச்சி

முதுதுவரைக் குலபதியாய்க காலிப்பின்னே இலைத்தடத்த குழலூதி ஆயர் மாதர்

இனவளைகொண் டான் அடிக்கீழ் எய்த கிற்பீர் (6.6 : 7)

என்றும், மற்றொருதிருநறையூர் திருமொழியில,

மட்டேறு கற்பகத்தை

மாதர்க்காய் வண்துவரை

நட்டானை நாடி

நறையூரில் கண்டேனே (6.8 ; 7)

என்றும் நினைவுகூர்கின்றார்

ஜாம் நகருக்கும் தக்காவிற்கும் இடையிலுள்ள ஓர் இருப்பூர்திநிலையம். தக்காவிலிருந்து 18 கல் தொலைவிலுள்ளது. - எல்லாவசதிகளும் கொண்ட ஒரு சிறிய நகரம்.இருப்பூர்தி நிலையத் திலிருந்து ஒரு கல்இதாலைவிலுள்ளது இத் திருத்தலாம். இங்கு இராமாநுசி கூடம் ஒன்று உண்டு. அங்குத் தங்கலாம். இறைவன்: கல்யாண் நாராயணன் இருந்து திருக்கோலம்; மேற்கு நோக்கிய திருமுகமண்டலம், தாயார்: கல்யர்ண் நாச்சியார். பெரி திரு 6.6 7; 6.8 : 7 மேலும் விவரம் வேண்டுவோர் இவ்வாசிரியரின் வட காட்டுத் திருப்பதிகள் 11-வது கட்டுரை காண்க.