பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டைநாட்டுத் திருத்தலப் பயணம் 95

ஏத்துவார்தம் மனத்துள் ளான், இட

வெந்தை மேவிய, எம்பிரான்,

தீர்த்தநீர்த் தடம்சோலை சூழ்திரு

வேங்க டம் அடை நெஞ்சே."

(ஏத்துவார்தம்-துதிப்பவர்களுடைய: மேவியபொருந்திய, தடம் சோலை-பெரிய சோலை).

என்ற பாசுரப் பகுதியால் இதனை அறியலாம்.

இத்திருப்பதி எம்பெருமானைப் பற்றிய ஆழ்வார் பதிகம் தாய்ப்பாசுரங்களாக நடைபெறுகின்றது. இங்கு ஆழ்வாரிடம் நாயகியின் நிலை ஒரு புறத்திலும் தாயின் நிலை மற்றொரு புறத்திலும் எழுவதைக் காண்கின்றோம். பெற்றோர் அல்லது உறவினர் துணையின்றித் தானா கவே புணர்ந்து தலைவனுடைய மேம்பாட்டிலே மிகவும் ஈடுபட்டுத் தான் பிறந்த குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல் அவனைக் கிட்டியல்லது நான் உயிர் வாழேன்' என்று பதற்றத்தை யுடையவளாக இருப்பவள் மகள். பெற்று வளர்த்துப் பெண் பிள்ளை தக்க பருவம் எய்தின வுடன் தலைவனிடமுள்ள அன்பு மிகுதியினால் அவளருப்

கோயிலை அடையலாம் இந்த ஆழ்வாரைத் தவிர, வேறு எந்த ஆழ்வாராலும் மிங்களாசாச னம் செய்யப் பெறாத தலம். எம்பெருமான்: ஆதி வராகப் பெருமாள் (மூலவர்) நின்ற திடுக் கோலம். கிழக்கு நோக்கிய திருமுகமண்ட்லம். தாயார்: அகில வல்ல உற்சவர்: நித்திய கல்யா ணப் பெருமாள் தனிக் காயில் கொண்டுள்ள தாயார்; கோமளவல்லி ஆ.பா: பெரி திரு. 8:4; 2.7 (பதிகம்) சிறி. திரு டல் (39); பெரி திரு மடல் (58). மேலும் விவரம் வேண்டுவோர் இந்த ஆசிரியரின் தொ நா. தி. என்ற நூவில் 12-வது கட்டுரை காண் க. 15. பெரி. திரு. 1. 8:4