பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சித் திருத்தலப் பயணம் 199

தோன்றுவதே உருவெளித் தோற்றம் என்பது. இந்த உரு வெளித்தோற்றம் அன்பினாலும் நிகழும்; அச்சத்தினாலும் உண்டாகும். சூர்ப்பனகையினால் சீதாப் பிராட்டியின் அழகை விரிவாகக் கேட்டறிந்த இராவணன் அச்சீதையை இடைவிடாது நினைத்த காரணத்தால் ஒரு பெண்ணுரு வம் அவனுக்கு உருவெளித்தோற்றமாகக் காணப்பட் டது. அங்ங்ணமே இராமனது எழிலில் ஈடுபட்டு அவனை அணைய வேண்டும் என்று எண்ணிய சூர்ப்பனகைக்கும் ஒர் ஆணுருவம் உருவெளித் தோற்றமாகக் காணப்பட் டது. இவை இரண்டும் அன்பினால் நிகழ்ந்தவை. இராவ ணன், தான் சீதையைக் கவரும் பொருட்டுத் தனக்கு உதவியாக, மாரீசனைப் பொன்மானாகச் செல்லுமாறு ஏவியபோது, மாரீசன் இருமுறை இராமனால் சூடு கொண்ட பூனை யாதலின் பார்த்தவிடமெங்கும் தனக்கு இராமனுருவம் தோன்றுவதாகக் கூறியது அச்சத்தால் நிகழ்ந்த நிகழ்ச்சியாகும். இத்தகைய உருவெளித் தோற்றத் தைத் தொல்காப்பியரும் நோக்குவ எல்லாம் அவையே போறல்' என்று ஒரு காதல் துறையாக வகுத்துக் காட்டுவர்.

冰 岑 密 景

பரகால நாயகி உறக்கம் வராமல் எம்பெருமானை நினைத்த வண்ணம் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கி றாள். அவள் ஊனக்கண் முன்னே,

மின்னிலங்கு திருவுருவும், பெரிய தோளும்,

கரிமுனித்த கைத்தலமும், கண்ணும், வாயும்

தன் அலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே

தாழ்ந்து இலங்கு மகரம்சேர் குழையும் காட்டி"

|கரி-குவலயாபீடம் என்ற யானை!

11. தொல். பொருள். கள. நூற். 18. 12. திருநெடுந். 25