பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiii

வண்டடைந்த மதுவிரதப் பெயரைக் கூறும்

வனப்பிற்குள் மனம்பதிந்தால் பொலிவு தோன்றும்; கொண்டிருக்கும் ஞானத்தில் தான்தன் பேச்சு

கூடிவரும் பிரேமத்தில் தான்.பெண் பேச்சு கண்டிருக்கும் சுவைகூறும் எழுத்திற் குள்ளே

கண்பதிந்தால் காண்பதெலாம் மாலின் காட்சி! பண்கலந்த பாசுரத்தில் தோய்ந்த ஐயா

பார்த்தபடி படித்திட்டால் பரமன் காட்சி! 2 #

பெற்றவளின் உளமாகிப் பெருமை பேசிப்

பேணுகின்ற அகக்காதல் பேச்சி னாலே பற்றுகின்ற தாய்ப்பாசுர விளக்க மெல்லாம்

பக்குவத்தை வெளிப்படுத்தும் ஆன்மக் காட்சி! உற்றதுணை என்றுணர்ந்தே ஆன்ம வேள்வி

உருவாக்கும் தோழிப்பா சுரங்கள் எல்லாம் நற்பயனைக் காண்பதற்கு வழிகள் காட்டும்

நம்மவரின் விளக்கங்கள் நயத்தைக் கூட்டும்! 22

உள்ளத்தில் உருக்கங்கள் வந்த வண்ணம்

உயிர்ப்பிற்குள் இறைவேட்கை வளர்த்த வண்ணம் பள்ளமடை வெள்ளமெனப் பாய்ந்த வண்ணம்

பாடுகின்ற மகள்.பாசுரப் பாடல் யாவும் அள்ளுசுவை விளக்கத்தால் பொலிவைக் கூட்ட

அமைந்திருக்கும் கருத்தோட்டம் நெஞ்சிற் குள்ளே தெள்ளுற்ற தமிழமுத இனிமை சேர்க்கும்

திருமாலின் அகவிளக்கம் அருளைச் சேர்க்கும்! 2苏

வழிபாட்டின் வழியில்தான் அருளைக் காணும் வகைகூறும் தத்துவத்தில் பாவைக் காட்சி;

மொழிகின்ற அவதாரம், தத்து வத்தின்

முழுமைக்குள் அடங்குவதும் விளக்கக் காட்சி;