பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xii

மடைவெள்ளப் பெருக்காகக் கலியன் பாடல்

மாநிலத்தின் தலமெல்லாம் இருகை நீட்டி

நடைபோட்டுத் தந்திருக்கும் பயணக் காட்சி

நாளெல்லாம் மணிவண்ணன் நலனே கூறும்! 17

அகப்பொருளில் இறையன்பைக் காணும் பாங்கோ

ஆழ்வாரின் நெஞ்சளித்த பரிசி லாகும்: தகவுடையார் சொல்விளக்கம், பரிசின் சீர்மைத்

தகுதிகாண விதந்தோதித் தரத்தைக் காட்டும்; 'மிகநல்ல மிகநல்ல என்னும் வண்ணம்

மேலான தத்துவத்தின் விளக்கம் யாவும் அகத்தினிலே திருவருளின் பதிவைக் காணும்;

அப்பதிவில் நிலைப்பதெலாம் இறைமை ஒன்றே: 18

முறையான மனக்காதல் முகிழ்த்து விட்டால்

முத்தமிழில் மாலவனைப் பணிந்து விட்டால் நிறைவான பேரின்பம் நெஞ்சில் தோன்றும்

நினைவிற்குள் மணிவண்ணன் நேசம் தோன்றும்; இறையின்ப அநுபவத்தைத் தந்த சொல்லில்

இனியவனைத் துய்த்தமனப் பற்றைக் கண்டேன்; மறையாளன் திருவருளின் அநுப வத்தில்

மனம்தோய்ந்த என்னாசான் நெஞ்சம் கண்டேன்! 19

ஊர்விளக்கம் உற்றபல தலவி ளக்கம்

உயர்ந்தோங்கும் திருக்கோவில் விளக்கம் சீர்த்த பேர்விளக்கம் பெருமைதரும் பாவி ளக்கம்

பேராளன் அருள் விளக்கம் செயல்வி ளக்கம் சீர்விளக்கம் கலியனாரின் மனவி ளக்கம்

செந்தமிழின் சுவைஊட்டும் சொல்வி ளக்கம் யார் தருவார் இவர்போல நூலுக் குள்ளே?

எமையாளும் பரமனவன் விளக்கம் கண்டேன்! 29