பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi

என்றுமுள தென்தமிழை இயம்பிக் கம்பர்

எழுதிவைத்த இராமகாதைச் சுவையைப் போல குன்றாத காதலுடன் கோதை சொன்ன

கொண்டாட்டத் திருப்பாவைப் பண்ணைப் போல நன்றறிந்த ஆழ்வார்கள் நாளும் நாளும்

நவின்றிட்ட பிரபந்தப் பாடல் போல என்றென்றும் ஐயா உம் இளமை நெஞ்சால்

எமைவளர்க்கும் தமிழ்தருக என்றே கேட்பேன்! 14

தன்னை நன்றாய்த் தமிழ்செய்யு மாறு தேவன்

தந்ததமிழ் கொண்ட தகை சான்ற ஐயா, மன்னுமாரு தமிழ்ச்செம்மல் என்றே ஆனிர்

மாண்புடைய அருங்கலைக்கோன் என்றும் ஆனிர்; தன்னின்பப் பெருக்காலே தமிழும் நாளும்

சடகோபன் பொன்னடிஎன் றிசைத்து வாழ்த்தக் குன்றெனவே உயர்கின்றீர் வணங்கு கின்றேன்

கூறுதமிழ்ப் பாசுரம்போல் வணங்கு கின்றேன்! 15

கலியனார் இறைவாழ்வின் காட்சி கூறும்

கனிவான செய்திகளோ செவிசேர் இன்பம் மலிந்திருக்கும் அகச்சான்றின் நிறைவைக் காட்டி

மணித்தமிழில் வடித்திருக்கும் வாழ்க்கைக் காட்சி சலிப்பின்றி நமையழைத்துச் செல்லும் பாதை

சார்ந்திருக்கும் வைணவத்தின் செழுமைப் பாதை! பொலிந்திருக்கும் கட்டுரைக்குள் பாடற் சான்று

பொன்னான ஆழ்வாரின் வாழ்வைக் காட்டும்! 16

வடநாட்டுத் திருத்தலங்கள் வழங்கும் தேவ

வளக்காட்சி ஒருமைக்குச் சான்று கூறும்;

திடங்கொண்ட மூவேந்தர் பார்வை கொண்ட திருநாட்டின் பயணங்கள் அருளைக் கூறும்