பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

覆魔盛 பரகாலன் பைந்தமிழ்

ہسپتہ نہی-سنہ---

கலைகளும், வேதமும், நீதிநூலும்,

கற்பமும் சொற்பொருள் தானும்மற்றை நிலைகளும், வானவர்க் கும்.பிறர்க்கும்

நீர்மையி னால் அருள் செய்துநீண்ட மலைகளும், மாமணி யும்,மலர்மேல்

மங்கையும், சங்கமும் தங்குகின்ற அலைகடல் போன்றிவர் ஆல்கொல்?’ என்ன

அட்டபுயகரத் தேன்.என் றாரே (2.8:5)

(கலை-உபநிடதம்; வேதம்-நான்மறை; நீதி நூல்-இதிகாசம், கல்பம்-கல்பசூக்தம்; சொல். இலக்கணம்; பொருள்-மீமாம்சை; நீர்மைகருணை; மணி-கெளத்துவம்; மங்கை-பெரிய பிராட்டியார்;

இப்பாசுரத்தில் "சாத்திரங்களாகிய கடல்களைத் தந்தருளிய கருங்கடலோ இவர்?' என்று விடுக்கும் வினா விற்கு 'அட்டபுயகரத்தேன். நான்' என்று எம்பெருமான் விடையளிக்கின்றான்.

எம்பெருமான் கடல்போல் இருப்பவன் என்று. சொல்லுவதுண்டு. நிறம்பற்றி வந்த உவமையாகச் சொல்லுவது இது. "முகில் வண்ணன்', 'மை வண்ணன்', கடல் வண்ணன் என்ற பெயர்களினால் இதனை அறியலாம். ஈண்டுச் சொல்லப்பெறுவது : கடலிலுள்ள பொருள்கள் யாவும் எம்பெருமானிடத்திலும் உள்ளன என்பதாகும். கடலிலுள்ள மைநாகம் போன்ற மலை களை நினைந்தும் எம்பெருமானுடைய திருத்தோள்களை நினைந்தும், கடலும் மலைகளையுடையது, எம்பெரு மானும் மலைகளையுடையவன்' என்று கூறப் பெறுகின் றது. கடலிலும் மாமணிகள் உள்ளன; எம்பெருமானும் "குருமா மணிப்பூண்' என்ற கெளத்துவ மணியையுடைய வன். மலர்மங்கை தங்கப்பெற்றது கடல்; எம்பெரு