பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

it; பரகாலன் பைந்தமிழ்

(போதவிழ்" என்ற அடைமொழியைப் பூவை

காயாவுக்கும் கூட்டி பொருள் கொள்கi.

என்ற பாசுரப்பகுதி திருமேனியின்பால் அவருடைய ஈடுபாட்டினைக் கட்டுகின்றது. 'கால் ஆழும், நெஞ்சு அழியும், கண் சுழலும்" என்ற அவளுடைய நிலையைக் காண முடிகின்றது.

எம்பெருமானுடைய திருமேனியின் இயற்கை யழகிலும் தன்னுடைய உள்ளத்தைப் கொடுத்துவிடு கின்றாள் பரகால தாயகி.

முழுசிவண்டு ஆடிய தண்துழாயின்

மொய்ம்மலர்க் கண்ணியும் மேனிஅம்சாந்(து) இழுசியகோலம் இருந்த வாறும்

எங்ஙனம் சொல்லுகேன்! ஒவிநல்லார் எழுதிய தாமரை அன்னகண்னும்

ஏந்தெழில் ஆகமும் தோளும்வாயும் அழகியதாம் (2.8.1)

(முழுசி-(தேனில்) மூழ்கி; மொய்ம்மலர்க் கண்ணி-நெருங்கத் தொடுக்கப்பட்ட மாலை; சாந்து-சந்தனம்; ஒவிநல்லார்-ஒவியர்; ஏந்து எழில்-மிக்க அழகு ஆகம்-மார்பு!

என்று அவள் பேசுகின்ற பேச்சினால் இதனை அறியமுடி கின்றது. தேன் ஒழுகும் திருத்துழாய் மாலையைச் சாத்திக்கொண்டிருந்த அழகும், சந்தனக் காப்பால் பொலிந்த அழகும் என்னே! அன்றியும், அவருடைய திருக்கண்களும், திருமார்பும், திருத்தோள்களும், திருப் பவழமும் (உதடுகள்) ஒவிய வல்லாரால் எழுதப்

14. பெரி. திருவந்-34