பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் 171

விடுவித்துத் தன்கோட்டு நுனியில் வைத்தருளிய கோல வராக மூர்த்தியாகவும் வாணனுடைய ஆயிரந்தோள் களைத் துணித்த கண்ணனாகவும் (3); வலிமிக்க ஏழு காளைகளை அடக்கிப் பின்னைப் பிராட்டியை மணந்த பெருமானாகவும், இரணியனின் மார்பைப் பிளந்து அவனை முடித்தருளிய நரசிம்ம மூர்த்தியாகவும் (4) சேவை சாதிக்கின்றான்.

இருபத்தொருமுறை சத்திரியர்களைக் கொன்று அவர்தம் குருதியால் தம் வமிசத்தில் மாண்டவர்கட்குத் தர்ப்பணம் செய்த பரசுராமனாகவும் குவலயாபீடம் என்ற யானையைக் கொன்றொழித்த கண்ணனாகவும் (5): வாலி கவந்தன், விராதன் இவர்களை மீளா உலகிற்கு அனுப்பிய இராம மூர்த்தியாகவும் (6): இராவணனுடைய பத்துத் தலைகளையும் பனங்காய்களை உருட்டுமாப்போலே இற்று விழச் செய்த காகுத்தனாகவும் (7); அழகெலாம் திரண்டு திகழும் சத்தியபாமாவுக்காக உம்பருலகச்சோலை யிலிருந்தும் பாரிசாதமரத்தைப் பிடுங்கி வந்த கண்ணபிரா னாகவும் (8); பிறையணிந்த பிஞ்ஞகனை வலப்புறத்தி லும் நான்முகனை நாபிக் கமலத்திலும் பெரிய பிராட்டி யாரைத் திருமார்பிலும் வைத்துக் கொண்டிருக்கும் மூர்த்தியாகவும் (9) காட்சியளிக்கின்றான். இந்த மூர்த்தி களையெல்லாம் மானசீகமாகக் கண்டு அநுபவித்த ஆழ்வார் “இத்தகைய எம்பெருமான்தான் காழிச்சீராம விண்ணகரில் கோயில் கொண்டுள்ளான்; அ; tெனை வணங்கும் பொருட்டு அத்திருத்தலத்திற்கு ஏகுவீர்” என்று நம் போன்றவர்களை ஆற்றுப்படுத்துகின்றார். அடுத்துத் திருவாலி திருநகரிக்கு வருகின்றார்.

3. திருவாலி : திருநகரி : எம்பெருமானைத் திரு மகள் ஆலிங்கனம் செய்த தலமாதலால் இத்திருத்தலம் 4. திருவாலி : மாயூரத்தினின்றும் திரு வெண்காடு செல்லும் சில பேருந்துகள் திருவாலி வழியாகச்