பக்கம்:பரகாலன் பைந்தமிழ்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் | 83

களாய் சுத்தமான நிறத்தை உகக்கும் தன்மையர்களா கையால் அவர்கட்காகப் பால் நிறவண்ணனானிர்; திரே தாயுகத்தில் பசுமை நிறத்தைக் கொண்டீர்; கலியுகத்தில் எந்த நிறத்தைக் கொண்டாலும் ஈடுபடுவாரின்மையால் இயற்கையான நீலநிறத்தைக் கொண்டீர். இப்போது அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் இருப்பில் எந்த நிறம் கொண்டிருக்கின்றீர் என்பதை அடியேன் அறிய வேண் டாவோ? இதோ பாராய், இதுவே என்வண்ணம்’ என்று சொல்லி வடிவைக் காட்டியருளுவீர்” (8) என் கின்றார்.

'ஏழு தலைமுறையாக வந்து அடிமை செய்யும் குடி யிலே பிறந்த அடியேன் விஷயத்தில் இவ்வளவு ஆலோசிக் கின்றீர். இது தகுதியோ? தம்முடைய திருமேனியைச் சேவிப்பதற்கு இவன் தகுந்தவனா? தகாதவனா? என்று வாசி பார்க்கின்றீரே. இது பொருந்துமோ? திருமேனி யைக் கண்ணில் காட்டுவதற்கு இவ்வளவு ஆலோசிக்கின்ற நீர் ஒர் ஆலோசனையும் பண்ணாமல் நெஞ்சகத்தின்பால் முன்னே வந்து குடிகொண்டு விட்டீரே. இஃது ஏன் செய் தீர்? நெஞ்சில் புகுந்ததுபோல் கண்ணிலும் புகவேண்டும்; கண்ணில் புகாததுபோல் நெஞ்சிலும் புகாதிருக்க வேண்டும். ஒன்றுக்கு ஆலோசனை பண்ணாதவர் ஒன்றுக்கு மட்டிலும் ஆலோசனை பண்ணுவது ஏனோ? திருமேனியின் நிறத்தைச் சிறிதும் காட்டாதிருக்கின்றிரே, நித்திய சூரிகட்குக் காட்சி கொடுக்கும் வடிவை இங்குள் :ளார்க்கு முழுக்காட்சி கொடுப்பதற்காகவன்றோ இங்கு எழுந்தருளியிருப்பது?'(9) என்று கூறுகின்றார். இங்கணம் "இந்தளூர் அந்தணனைச் சேவித்துக் கொண்டு தலைச் சங்க நாண் மதியம் வருகின்றார் ஆழ்வார்.